Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 ஆகஸ்ட், 2020

குட்டிக் கதை... ஒரே செயல்... ஆனால் வேறு வேறு இடம்... எதனால்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
-------------------------------------
ஆனந்த் : மனைவியால் மட்டுமே சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒரு சேர தர முடியும்...
கோபி : எப்படி சொல்ற?...
ஆனந்த் : நாளைக்கு ஊருக்கு போறேன்... சாயங்காலமே வந்துருவேன்...
கோபி : 😂😂
-------------------------------------
பானு : என் வீட்டுக்காரர் இன்னும் உயிரோட வாழ்ந்துக்கிட்டு இருக்காருன்னா அதுக்கு நீங்கதான் காரணம் டாக்டர்...
டாக்டர் : அப்படியா...!! நான் இவருக்கு எந்த ஆப்ரேஷனும் இன்னும் பண்ணலையே?
பானு : அதனால தான் டாக்டர் அப்படி சொன்னேன்...
டாக்டர் : 😏😏
-------------------------------------
குட்டிக் கதை...!!
-------------------------------------

ஒரு தெருவழியே பிச்சைக்காரன் வந்து கொண்டிருந்தான். ஒரு வீட்டுக்குள்ளே இருந்து ஒரு அம்மா குழந்தையோடு வந்தாள்.

குழந்தையின் கையில் அரிசியை கொடுத்து பிச்சைப்போட சொன்னாள். அதை வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டுக்கு வந்து நின்றான் பிச்சைக்காரன்.

அடுத்த வீட்டு பெண்ணும் தெருவில் விளையாடி கொண்டிருந்த தன் குழந்தையை கூப்பிட்டு அந்த குழந்தையின் கையால் பிச்சைப்போட செய்தாள். கொஞ்ச காலம் கழித்து இரு பெண்களும் இறந்து மேல் உலகம் போனார்கள்.

முதல் பெண்ணை சொர்க்கத்திற்கும், இரண்டாவது பெண்ணை நரகத்திற்கும் அனுப்ப சொன்னார், நீதிதேவன். இரண்டாவது பெண் என்னை மட்டும் ஏன் நரகத்திற்கு போகச் சொல்கிறீர்கள்?

அந்தப்பெண் குழந்தையிடம் கொடுத்து தர்மம் செய்த மாதிரி தானே நானும் செய்தேன்? என்று சண்டை போட்டாள்.

அதற்கு நீதிதேவன் சொன்னார், நீங்கள் இருவருமே குழந்தையின் மூலம் பிச்சையிட்டாலும், உங்கள் இருவரின் எண்ணமும் வேறு மாதிரி இருந்தது. அந்த பெண் குழந்தையின் மூலம் பிச்சைப்போட்டு அந்தப் புண்ணியம் நம் குழந்தைக்கு கிடைக்கட்டும் என்று நினைத்தாள்.

அதனால் அவளுக்கு சொர்க்கம். ஆனால் நீ உன் கையால் பிச்சை போட்டால் அதிக அரிசி போய்விடுமே என்று நினைத்து, குழந்தையின் கையால் பிச்சை போட்டாய். உனக்கு கெட்ட எண்ணம் இருந்ததால் புண்ணியம் கிடைக்கவில்லை என்றார்...
-------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
-------------------------------------

நேர்மறை சிந்தனை உள்ளவனை விஷத்தால் கூட கொல்ல முடியாது...

எதிர்மறை சிந்தனை உள்ளவனை மருந்தால் கூட காப்பாற்ற முடியாது...

எண்ணம்போல் வாழ்க்கை...!!
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

விளக்கம் :

ஒழுக்கமே எல்லாருக்கும் மேன்மையை தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விட சிறந்ததாக போற்றப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக