வியாழன், 21 நவம்பர், 2019

உங்களால் இதை சொல்ல முடியுமா?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க வைக்கும் ஜோக்ஸ் !!!
டாக்டர் : உங்க உடம்புக்கு என்ன? எதுக்கு பெட்ல உங்களை அட்மிட் பண்ணியிருக்காங்க?
நண்பர் : என்ன டாக்டர் விளையாடுறீங்களா?
டாக்டர் : ஏன்?
நண்பர் : உங்கள பாத்து கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.. ஆனா உங்க ஆளுங்க என்னடான்னா என்ன குண்டு கட்டா தூக்கிட்டு வந்துட்டாங்க...
டாக்டர் : 😂😂
-------------------------------------------------------------------------------------------------------------
இளைஞன் : வன்முறை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணியிருக்கேன் சார்.
முதியவர் : வெரிகுட்! வெரிகுட்! அதுக்கு நான் என்ன உதவி பண்ணனும்?
இளைஞன் : உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும். அவ்வளவுதான் சார்.
முதியவர் : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------------

கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேயிருந்து வந்தது உனக்கு இவ்வளவு தைரியம்.
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலங்க, நீங்கதான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான் அடிச்சேன்...
கணவன் : 😫😫
-------------------------------------------------------------------------------------------------------------

கொஞ்சம் டிரை பண்ணுங்க...!!
😆 திருவாரூர்ல தென் தெருவுல தெற்கு வடக்கு முக்குல இருக்கும் செக்கடி வக்குருடா நீ என்ன நெருடுகிறாய் நான் கரடு முரடு சரடு நெருடுகிறேன்.

😆 அடடா பலநரி இருட்டுல கரடேறுதடா... அதுசரி அதிலொரு நரி செந்நரி.... செந்நரி வாலிலே ஒரு பிடி நரை முடி.

😆 கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும்போது குளிக்க வந்த குரங்கு குட்டியை குச்சியால் குத்தினான். குரங்கு குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------

வேடிக்கையான வினா விடைகள்!!
1. அச்சக உரிமையாளர் எப்படி தும்முவார்? - அச்சு அச்சு என்று..!

2. பள்ளத்தில் விளையாடும் விளையாட்டு எது? - பல்லாங்குழி

3. புறம் பேச சிறந்த இடம் எது? - புறம்போக்குநிலம்

4. மரியாதைக்குரிய மீன் எது? திருக்கைமீன்

5. எந்த கட்டையை சாப்பிடலாம்? - கொழுக்கட்டை.
-------------------------------------------------------------------------------------------------------------

என்ன வித்தியாசம்..!!
🤔 சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காச கரியாக்குவாங்க!
நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்