வியாழன், 21 நவம்பர், 2019

இந்த எண்ணம் சரியானதா?

 Image result for இந்த எண்ணம் சரியானதா?இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மாமல்லம் என்ற ஊரில் பண்டிதர்கள், வித்வான்கள், புலவர்கள் என எல்லாருக்கும் ராஜா சம்பளம், சன்மானம் எல்லாம் கொடுப்பதுண்டு. அதேபோல ராஜாவுக்கு சலவைக்கு, ஸ்நானம் செய்து வைக்க, சவரம் செய்ய, எண்ணெய் தேய்க்க என சில தொழிலாளிகளும் இருந்தனர்.

அதில் அங்கு வேலை செய்யும் எண்ணெய் தேய்க்கும் தொழிலாளிக்கு, அங்கிருக்கும் வித்வானை கண்டால் பிடிக்காது. அந்த வித்வானை ஒழித்துவிட வேண்டும் என்று மனதில் நினைத்திருந்தான். ஒரு நாள், ராஜாவுக்கு எண்ணெய் தேய்க்கும்போது, மகாராஜா! எனக்கு ஒரு குறை இருக்கிறது! என்று கூறினான். என்ன அது? என்று ராஜா கேட்டார்.

பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணெய் தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணெய் ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணெய் தேய்க்கின்றனரோ, என்னவோ, அதுதான் என் குறை! என்றான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று ராஜா கேட்டார். நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே, அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே. அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே! என்றான்.

ராஜாவும், சரி... நான் நாளைக்கே அவரிடம் சொல்லி, போய் வரச் சொல்கிறேன்! என்றார். வேத வித்வானை அழைத்து விஷயத்தை ராஜா கூறினார். அதைக்கேட்ட வித்வான் யோசித்துவிட்டு, இது அந்த எண்ணெய் தேய்ப்பவனின் வேலை தான்! என்று யூகித்துக் கொண்டார். அப்படியே ஆகட்டும் மகாராஜா, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். இடுகாட்டில் ஒரு தளம் அமைக்கச் சொல்லுங்கள். நல்ல நாள் பார்த்து, நான் அதில் படுத்துக் கொள்வேன். சிதை அடுக்கி நெருப்பு வைத்து விடுங்கள்.

பிறகு எட்டு நாட்கள் கழித்து நான் திரும்பி வருவேன். அதுவரை யாருமே அங்கு வரக்கூடாது! என்றார். ராஜாவும் ஒப்புக் கொண்டார். இடுகாட்டில் தளம் அமைத்தனர், குறிப்பிட்ட நாளில் அதில் வித்வான் படுத்துக் கொண்டார். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணெய் தேய்ப்பவர் இதை நேரில் நின்று பார்த்துவிட்டு, அப்பாடா.. தொலைந்தான்! என்று சந்தோஷப்பட்டான்.

ஆனால், வித்வான் ரகசியமாக ஒரு வேலை செய்தார். யாருக்கும் தெரியாமல் சிதை அடுக்கிய தளத்துக்கு அடியிலிருந்து அவர் வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். சிதைக்கு நெருப்பு வைத்ததும், இவர், ரகசியமாக சுரங்கப்பாதை வழியாக வீட்டுக்குள், ஒளிந்து கொண்டார். எட்டு நாட்களும் முடிவடைந்தது. எட்டாவது நாள் திரும்பி வருவதாக ராஜாவிடம் சொல்லியிருந்ததால், அவருக்காக மாலையுடன் ராஜா காத்திருந்தார்.

குறிப்பிட்ட நேரத்தில் சிதையை கலைத்துக் கொண்டு வித்வான் வெளியே வந்தார். ராஜா அவருக்கு மாலை போட்டு மரியாதை செய்து, பெரிய ராஜாவை பார்த்தீர்களா... எப்படி இருக்கிறார்? என்ன சொன்னார்? என்று ஆவலோடு கேட்டார்.

வித்வானும், அவர் நன்றாகவே இருக்கிறார். ஆனால், எண்ணெய் மட்டும் தேய்த்துக் கொள்வதில்லையாம். அவருக்கு, நம்மிடம் உள்ள எண்ணெய் தேய்ப்பவர் வந்தால் தான் திருப்தியாம். அதனால், அவரை உடனே அனுப்பச் சொன்னார்! என்றார்.

ராஜாவும் எண்ணெய் தேய்ப்பவரை அழைத்து, நீ நாளைக்கே புறப்பட்டு சென்று பெரிய ராஜாவுக்கு எண்ணெய் தேய்த்து விடு! உனக்காக சிதை தயாராக இருக்கும்! என்று உத்தரவு போட்டார். எண்ணெய் தேய்ப்பவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ராஜாவின் காலில் விழுந்து, வித்வானை ஒழித்துக்கட்டவே, தான் அப்படி சொன்னதாக ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டான்.

ராஜா கோபத்துடன் எண்ணெய் தேய்ப்பவனை உடனே நாடு கடத்த உத்தரவிட்டு, வித்வானிடம் மன்னிப்பு கேட்டார். தான் அவன் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டதற்காக வருந்தினார்.

நீதி : பிறருக்கு கேடு நினைத்தால் தனக்கே கேடு விளையும்! எனவே, பிறருக்கு கேடு நினைக்காதீர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்