திங்கள், 4 மே, 2020

ஹா... ஹா... சிரிக்க சிரிக்க சிரிப்பு... இது எப்படி இருக்கு? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!

பையன் : சார்... எனக்கு ஒரு பிரச்சனை... Complaint கொடுக்கணும்...
இன்ஸ்பெக்டர் : சொல்லுங்க தம்பி. உங்க பிரச்சனை என்ன?
பையன் : சார், நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அவளும் என்னை ரொம்ப லவ் பண்றா. ஆனா எங்க லவ் மேட்டர் அவ அப்பாவுக்கு தெரிஞ்சா, பெரிய பிரச்சனையா ஆயிடும்-னு அவ பயப்படுறா சார். நீங்கதான் எங்களை சேர்த்து வைக்கணும் சார்.
இன்ஸ்பெக்டர் : ஒன்னும் கவலைப்படாதீங்க தம்பி. அந்த பொண்ணோட அப்பா எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், அவன நான் பாத்துக்கிறேன். உங்க காதலிய தைரியமா இருக்க சொல்லுங்க தம்பி. இன்ஸ்பெக்டர் இருக்காரு பயப்பட வேண்டாம்ணு, உன் காதலிக்கிட்ட போய் சொல்லுப்பா.
பையன் : இத நானே என் காதலிக்கிட்ட சொல்றதவிட, நீங்களே உங்க பொண்ணுக்கிட்ட சொல்லிடுங்க மாமா...
இன்ஸ்பெக்டர் : 😳😳
-----------------------------------------------------------------------
சிறந்த பண்புகள்...!!

👉 கேட்டால் தவிர யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள்...
👉 மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று யோசிப்பதை நிறுத்திவிட்டு உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்...
👉 கோபம் வந்தால் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்...
👉 யாராவது நல்ல விஷயங்கள் 
செய்தால் அதை பாராட்டுங்கள்...
-----------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

விளக்கம் :

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்