Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 மார்ச், 2020

இன்றைய கடி... வயிறு குலுங்க சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


இது சிரிக்க மட்டுமே...!!

சேகர் : சின்ன முள்ளு கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?
சங்கர் : பாத்து பத்திரமா எடுத்து, திருப்பி கடிகாரத்திலேயே மாட்டிடு... இல்லேன்னா மணி பாக்க முடியாதே...
சேகர் : 😩😩
-----------------------------------------------------------------------------------------------------
மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கி தந்தீங்க தெரியுமா?
கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்கு பணம் கட்டினாரே!
மனைவி : 😠😠
-----------------------------------------------------------------------------------------------------
நேர்மறை... எதிர்மறை எண்ணம்...!!

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதை பழக்கம் உள்ளவன். எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை மிரட்டி பணம் வாங்கி குடித்துக்கொண்டே இருப்பான். பிறருக்கு தொல்லை கொடுத்து இன்பம் பெறுவான். மற்றவன் நல்லவனாக, சமூகத்தில் மதிக்கப்படுபவனாக, நல்ல குடும்ப தலைவனாக இருந்தான்.

அருமையாக குடும்பத்தை பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. ஒரே தகப்பனுக்கு பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர் போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்க காரணம் என்ன? என்று.

ஒரு பெரியவர் குடிகார மகனையும், நல்ல குடும்ப தலைவனையும் இப்படி கேட்டார். உன் நடத்தைக்கு யார் காரணம்? என்று... இருவரும் ஒரே பதிலைதான் கூறினார்கள். என்னுடைய நடத்தைக்கு காரணம் என் அப்பா என்று.

உன் அப்பா என்ன செய்தார்? என்று குடிகார மகனை கேட்டபோது எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து என் அப்பா இரவிலும், பகலிலும் குடித்துக்கொண்டே இருப்பார். குடும்பத்தினரை தொந்தரவு செய்துக்கொண்டே இருப்பார்.
அடிகளுக்கு பஞ்சமில்லை... அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன்? அதனாலேயே நானும் குடிகாரனாகி விட்டேன். மோசமான தகப்பனின் மகனான நான் மோசமாகி விட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம் என்றான்.

பின்னர் உன் அப்பா என்ன செய்தார்? என்று நல்ல மகனாக இருப்பவனை கேட்டார். அதற்கு அவன் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே என் தந்தை இரவிலும், பகலிலும் குடித்துக்கொண்டே இருப்பார்.

குடும்பத்தினரை தொந்தரவு செய்துக்கொண்டே இருப்பார். அடிகளுக்கு பஞ்சமில்லை... அதனாலேயே நான் குடிக்கக்கூடாது.

குடிகாரனாகி விடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனான நான் மோசக்காரனாக இருக்காமல் நல்லவனாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால் என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம் என்றான்.

நீதி :

எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளும் உண்டு... நாம் அதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் நமது செயல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக