Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

இது எப்படி இருக்கு? படிங்க... சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிப்பதற்கான நேரம்...!
ராமு : கண்ணு கோளாறு-ன்னு சொன்னியே கண் டாக்டர போய் பாத்தியா?
சோமு : அவருக்கு நானே பரவால...
ராமு : ஏன்டா?
சோமு : கண்ணு தெரியலன்னு போனா அவரு டார்ச் அடிச்சு என் கண்ண பாக்குறாரு...
ராமு : 😀😀
---------------------------------------------------------------------
மனைவி : எல்லை தாண்டிய பயங்கரவாதம் அப்படினா என்னங்க?
கணவன் : நீ என்மேல பூரிக்கட்டையை தூக்கி எறியும்போது அது தெருவுல போறவங்க மேலே படுதுல்ல அதான்..!
மனைவி : 😐😐
---------------------------------------------------------------------
ஆசிரியர் : உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்...
மாணவன் : சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க...
ஆசிரியர் : 😩😩
---------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
பாக்கு மரத்தில் பாக்கு இருக்கும்...
தேக்கு மரத்தில் தேக்கு இருக்கும்...
ஆனா பன மரத்தில் பணம் இருக்குமா?😎😎

அமைதிக்கான நோபல் பரிசை ஆயிரம் பேர் வாங்கலாம்...
ஆனா பொறுமைக்கான நோபல் பரிசுன்னா அது பெண்களிடம் சேலை விக்கிற சேல்ஸ்மேன் ஒருத்தருக்கே போகணும்..!😜😜

---------------------------------------------------------------------
திரும்ப வராது..!
👉 சொன்ன ஒரு சொல்..

👉 விடுபட்ட அன்பு..

👉 கடந்து போன வாழ்க்கை..

👉 நழுவவிட்ட சந்தர்ப்பம்...

ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது.
---------------------------------------------------------------------

நிமிட கதை..!
தெருவில் செல்போனை பார்த்துகொண்டு நடந்தவனை,🚶

பக்கவாட்டில் யாரோ மோதியதில் தடுமாறி கீழே விழுந்தான்.

கோபத்தில் அறிவில்லையா உனக்கு? எருமை மாதிரி மேல மோதுற என திட்டியபடி நிமிர்ந்து பார்த்தான்.🤷‍♂️

அங்கே உண்மையில் எருமைதான் நின்றிருந்தது.🐃

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக