உற்சவர் : வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை, மீனாட்சி அம்மன்
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : சிவஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கள்ளப்ப கோனான் பட்டி
ஊர் : திண்டுக்கல்
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருவிழா:
கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிவெள்ளி, சஷ்டி, கார்த்திகை, தைவெள்ளியன்று சிறப்ப பூஜைகள் நடக்கின்றன. தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பாக நடக்கிறது.
தல சிறப்பு:
புரட்டாசி, அமாவாசையன்று சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், என்.ஜி.ஓ. காலனி, திருச்சி ரோடு, உழவர்சந்தை எதிர்புறம், திண்டுக்கல்- 624001.
போன்:
+91 99944 52534.
பொது தகவல்:
கிழக்கு பார்த்த கோயில். முருகப்பெருமான் கிழக்கு பார்த்துள்ளார். சக்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகுராஜ பெருமாள், பஞ்சமுக ஆஞ்சநேயர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், மூகாம்பிகை, பைரவர், நவகிரகங்கள் உள்ளன. 2006ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பிரார்த்தனை
இங்கு செவ்வாய் தோஷம் நீங்கனும், திருமணத்தடை விலகவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரதான முருகன் கோயில் என்பதால் ஆண், பெண் இருபாலரும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் 11 வாரங்கள் (செவ்வாய் தோறும்) விளக்கு ஏற்றி வழிபட்டால் வெற்றி கிட்டும். செவ்வரளி அர்ச்சனை செய்வது விசேஷம். கந்த சஷ்டி, திருக்கல்யாணம், தைப்பூச திருக்கல்யாணம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், வைகாசி விசாக திருக்கல்யாணம் பக்தர்களால் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தலபெருமை:
திருமண தடை நீங்கி, புத்திர பாக்கியம் உண்டாகும் என்ற பெருமை இக்கோயிலுக்கு உள்ளது. திண்டுக்கல்லில் சக்தி அம்மன் மடியில் விநாயகர் இருப்பது இங்கு தனிச்சிறப்பு. பிரதோஷ வழிபாடு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. உட்பிராகாரத்தில் பல தெய்வங்களின் ஓவியங்கள் உள்ளன. இங்குள்ள கிணற்றில் ஆண்டு முழுவதும் வற்றாத தண்ணீர் உள்ளது.
தல வரலாறு:
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி முருகன் கோயிலுக்கு அடுத்தபடியாக சிறப்பு பெற்ற ஸ்தலமாக இக்கோயில் கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். இதை உறுதிபடுத்தும் வகையில், பாண்டிய மன்னரின் மீன் கொடி கல்வெட்டு இங்குள்ளது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை செல்லும்போது இக்கோயிலில் தங்கி முருகனை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிந்ததாக நம்பப்படுகிறது. பாண்டிய மன்னன் இக்கோயிலில் வழிபட்டு சென்றுள்ளார். கும்பகோணம், திருப்பூர் பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட இன மக்கள் தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக பழநி செல்லும் போது இன்றும் இக்கோயிலில் தங்கி செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: புரட்டாசி, அமாவாசையன்று சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக