சிரிப்பதற்கான நேரம்...!
ஆசிரியர் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினா போதும்.
மாணவன் : அது எப்படி சார் முடியும்? ஒரு நாளைக்கு 7 மணி நேரம்தான் ஸ்கூல்.!!!
ஆசிரியர் : 😩😩
---------------------------------------------------------------------
ஜோசியர் : கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு தோஷம் நீங்கிடும்...
விமல் : அப்படியா... என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்..
விமல் : 😕😕
---------------------------------------------------------------------
ரொம்ப நாள் டவுட்...!!🤔
ரொம்ப நாள் டவுட்...!!🤔
நீருக்கு அடியில அழ முடியுமா?😰
மீன்களுக்கு தாகம் எடுக்குமா?🐠
பறவைகள் ஏன் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லை?🕊
பணம் மரத்திலிருந்து வருவதில்லை, பின் ஏன் வங்கிகள் எங்களுக்கு கிளைகள் உள்ளன என்கின்றன?💰
பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டிக்கொள்வதில்லை?🍶
வட்ட வடிவ பீட்சா... ஏன் சதுர பெட்டியில் வருகிறது?🍕
---------------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
கணவனும், மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது,👫
மனைவி சற்று தொலைவில் இருந்த விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....
மனைவி : 500 ரூபாய் பணம் கொடுங்க... நான் 50 புடவை வாங்கணும்....
கணவன் : அது இஸ்திரி போடும் கடை டி...!😆😆
---------------------------------------------------------------------
மகிழ்ச்சி...!!
மகிழ்ச்சி...!!
💑 கணவன் சொல்வதை மனைவி கேட்பதும்...
💑 மனைவி சொல்வதை கணவன் கேட்பதும்...
💑 எதிர்ப்பின்றி வாழ்வதும் போலியான உறவே...
💑 கோபம் வந்தால் சண்டை போட்டு சமாதானம் ஆவதே இல்லறம்...
💑 ஆகவே கோபம், மகிழ்ச்சி, அழுகை மற்றும் மனஅழுத்தத்தை ஒருவருக்கொருவர் மறைக்க வேண்டாம்...
💑 வெளிப்படையாக இருங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்...
---------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
குறளும்... பொருளும்...!!
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
விளக்கம் :
பெரிய செல்வம் வந்து சேர்தல் என்பது, கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது. அது நீங்கிப் போதல் என்பது கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக