வியாழன், 27 பிப்ரவரி, 2020

பொறாமையால் ஏற்பட்ட இழப்பு... குட்டிக்கதை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


சிரிக்கலாம் வாங்க...!!

நோயாளி : டாக்டர்.. நான் அஞ்சுதடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டேன்...
டாக்டர் : முதல் தடவையே என்னைய வந்து பாத்திருந்தா.. இந்த பிரச்சனையே வந்திருக்காதில்ல..?
நோயாளி : 😳😳
-------------------------------------------------------------------------------------------------
பொறாமையால் ஏற்பட்ட இழப்பு..!
பாபு என்பவர் ஒரு ஊரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர்.

பாபு வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்கு போட்டியாக மணி என்ற வெளியூர் இளைஞர் ஜவுளிக்கடையைத் திறந்தார்.

இளைஞர்களையும், பெண்களையும் கவரும்படி புதிய வகை துணிகளை அவர் விற்பனை செய்ததால், மக்கள் அவருடைய கடைக்கு குவிந்தனர். அதனால் பாபுவின் வியாபாரம் மந்தமாகியது.

மணியின் மீது பொறாமை கொண்ட பாபு, அவர் வியாபாரத்தை தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரியதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார்.

சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மணியின் கடையில்தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.

இதைக்கண்டு பொறாமை கொண்ட பாபு வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்திற்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம்தான் மிஞ்சியது.

அதனால் பாபுவிற்கு மணியின் மீது உள்ள பொறாமை இன்னும் அதிகமானது. அதனால் அவர் சிந்திக்கும் திறனை இழந்தார். மணியின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப்படையை ஏவினார்.

ஒருநாள் இரவு மணியின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்புதான் பாபுவின் மனது நிம்மதி அடைந்தது.

ஆனால் மணி கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப்படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் பாபுவை காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு பாபுவின் கடை சீல் வைக்கப்பட்டது.

மணி தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தை தொடர்ந்தார். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

நீதி :

பொறாமை என்னும் குணம் தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்