Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 பிப்ரவரி, 2020

Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

 டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ்
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான Mi பிராண்ட் நிறுவனம் புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டகாசமான டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸின் சிறப்பம்சம் மற்றும் அதன் விலையைக் கேட்டல் நிச்சயம் வாங்க வேண்டும் என்று தான் அனைவருக்கும் தோன்றும். மேக்னெட்டிக் லாக் அம்சத்துடன் இந்த டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ்
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான மி நிறுவனம், அண்மையில் மி எலக்ட்ரிக் டூத் பிரஷ் டி300 (Mi Electric Toothbrush T300) மாடலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் எம் அவுட்டோர் புளூடூத் ஸ்பீக்கரையும் அறிமுகம் செய்தது. இப்போது, சியோமி மி நிறுவனம் நல்ல ஆடியோ தரத்தை விரும்புவோருக்காக புதிய ஆடியோ சாதனமாக இந்த டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்-இயர் ஹெட்போன்ஸ்         
இது ஒரு புதிய இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலாகும், டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் என்ற பேருக்கு ஏற்றார் போல் இதில் இரண்டு டூயல் டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, மற்ற டூயல் டிரைவர் இயர்போன்களைப் போலவே இதுவும் செயல்படுகிறது.
சிறப்பான செயல்திறனுடன் அறிமுகம்
புதிய டூயல் டிரைவர் இன்-இயர் இயர்போன்ஸ் ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்களில் கவனம் செலுத்தும் என்றும், சிங்கிள் டிரைவர் இயர்போன்களைப் போலல்லாமல், இது நடுத்தர மற்றும் உயர் அதிர்வெண்களில் நல்ல செயல்திறனை உறுதி செய்யும் என்றும் சியோமி கூறியுள்ளது.
நாய்ஸ் கேன்சலேஷன் அம்சமும் இருக்கிறது
சியோமி நிறுவனத்தின் இந்த புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலில் 10mm டிரைவர் மற்றும் 8 mm டிரைவரை நிறுவனம் இயர்போனுக்கு பயன்படுத்தியுள்ளது. இத்துடன் இந்த இயர்போனில் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சமும் கிடைக்கிறது. மலிவு விலை இயர்போனில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதேபோல் இயர்போன்ஸ்களை பாதுகாப்பிற்காக மேக்னெட்டிக் பேட்ச் லாக்கிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
3 பட்டன் கண்ட்ரோலர் சுவிட்ச்
டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் வயர்கள் சிக்கலில்லாமல் இருக்க டேங்கில் ஃபிரீ கேபிள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் உங்களுக்கு 3 பட்டன் கண்ட்ரோலர் வழங்கப்பட்டுள்ளது, இதை பயன்படுத்தி ஆடியோ பிளேபேக் கட்டுப்பாடுகள், வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சம் போன்ற அம்சத்தை கட்டுப்படுத்திக்கொள்ளலாம். 3.5 mm ஆடியோ போர்ட் 90 டிகிரியில் அமைக்கப்பட்டுள்ளது.
மலிவு விலையில் மிரட்டலான டூயல் டிரைவருடன் இயர்போன்ஸ்
டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடல் உங்களுக்கு, ப்ளூ மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மாடல் வெறும் ரூ.799 என்ற விலையில் Mi.com தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மலிவு விலையில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் மிரட்டலான டூயல் டிரைவருடன் கிடைக்கும் ஒரே இயர்போன்ஸ் மாடல் இதுவாக மட்டுமே இருக்க முடியும் என்று சியோமி கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக