Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 26 பிப்ரவரி, 2020

முன்னாள் காதலியின் திருமணத்தை நிறுத்த திட்டம் – போஸ்டர் அடித்து ஒட்டிய காதலன் கைது !

 https://media.webdunia.com/_media/ta/img/article/2020-02/26/full/1582701544-2266.jpg
னது முன்னாள் காதலியின் திருமணத்தை நிறுத்துவதற்காக போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியைச் சேர்ந்தவர் சரோஜ் குமார். இவரைக் காதலித்த பெண் சில மாதங்களுக்கு முன்னர் இவரைப் பிரிந்துள்ளார். அதனால் இப்போது அவருக்குத் திருமணம் நடத்தி வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அடுத்தவாரம் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அவரது திருமணத்தை நிறுத்த முடிவு செய்த சரோஜ்குமார் தானும் அந்த பெண்ணும் ஒன்றாக இருப்பது போன்று ஹோலி வாழ்த்து போஸ்டரை அடித்து அந்த பெண்ணின் வீடு இருக்கும் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் அவர் மேல் புகார் கொடுக்க போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக