புதன், 22 ஏப்ரல், 2020

துன்பம் இல்லாத வாழ்க்கை... எப்போது கிடைக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
நீதிபதி : உன்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணம் ஆகிவிட்டதால்... உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
குற்றவாளி : எத்தனை கிலோவை தூக்கணுமுன்னு சொல்லிட்டிங்கன்னா... நான் தூக்கிக்கிட்டு நடையை கட்டுறேன் எசமான்.
நீதிபதி : 😳😳
----------------------------------------------------------------------
கணவன் : 3 நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்...
மனைவி : இதையே, தினமும் பீர் குடிக்கும்போது நினைக்கலாமே..????
கணவன் : நாளைக்கும் பீன்ஸ் பொரியலே பண்ணுமா...
மனைவி : 😬😬
----------------------------------------------------------------------
நீதிபதி : பேங்க்ல பணத்தை கொள்ளையடிச்ச சரி... போகும்போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?.
திருடன் : பணம் மட்டுமே ஒரு மனுஷனுக்கு சந்தோஷத்தை கொடுக்காது எசமான்.
நீதிபதி : 😠😠
----------------------------------------------------------------------
துன்பம் இல்லா வாழ்க்கை...!!

பேராசைகள் இல்லாத வாழ்க்கையை எப்போது நீ தேடி செல்கிறாயோ...
அப்போது துன்பம் இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்...🤷🤷‍♂️
---------------------------------------------------------------------
பேனாவாக இருங்கள்...!!

பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாய் இருக்காதீர்கள்...

நீங்கள் நினைத்ததை எழுதும் பேனாவாக இருங்கள்...!!🖊

----------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!

தோற்று போய்விட்டோமே என உடைந்து போய் நிற்பதை விட,
தோல்விதானே என்று உறுதியுடன் திறம்பட
தளராத தன்னம்பிக்கையோடு எழுந்து ஓரடி வையுங்கள்...
அடுத்த அடி தானாக வைத்து வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கும்...
மனமும்... உடலும்
----------------------------------------------------------------------
 குறளும்... பொருளும்...!!
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

விளக்கம் :

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்