வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

படித்ததில் பிடித்தது... இது சிரிக்க மட்டுமே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------

மருமகள் : அத்தை, உங்க மகன்.. அதான்... என் புருஷனுக்கு பிடிச்சது ஏதாவது சொல்லுங்க... நான் சமைச்சு தர்றேன்.
அத்தை : உன் புருஷனுக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்...
மருமகள் : புளி ரசத்துக்கு புளி போடணும்... தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை?
அத்தை : 😳😳
-------------------------------------
படித்ததில் பிடித்தது... சிரிக்க மட்டுமே...!!
-------------------------------------

ஜட்ஜ் : எதற்காக விவாகரத்து கேட்கிறாய்?
குமார் : ஐயா.. என் மனைவி என்னை தினமும் பூண்டு உரிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள், பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. அதனால் விவாகரத்து தாருங்கள்...
ஜட்ஜ் : இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது.
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிட்ஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம், அரியும்போது கண்ணுலையும் தண்ணீர் வராது.
பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து தேய்ச்சா சரியாபோயிடுது.
அது மட்டுமல்ல துணிய சோப் பவுடர்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி, நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் ஊறவைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.
நீ சொன்ன காரணங்களுக்கு எல்லாம் விவாகரத்து தரமுடியாது. புரிஞ்சுதா...
குமார் : ஐயா... நல்லா புரிஞ்சுதுங்க.
ஜட்ஜ் : என்ன புரிஞ்சுது?
குமார் : என் பொண்டாட்டி பூண்டு, வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திக்கிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க...
ஜட்ஜ் : 😳😳
-------------------------------------
முத்தான பொன்மொழிகள்...!
-------------------------------------

⚡ அறிவு உங்களுக்கு அதிகாரத்தை கொடுக்கும்... ஆனால், குணம்தான் மரியாதையை பெற்று தரும்.

⚡ மனிதர்கள் அவர்களுடைய கடமையை மறக்கப் பழகியிருக்கிறார்கள். ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்