கலக்கலான ஜோக்ஸ் !!
குமார் : (சர்வரை பார்த்து கோபமாக) இந்த
மோசமான சாப்பாட்டை யார் சாப்பிடுவா? கூப்பிடு உங்க மேனேஜரை...
சர்வர் : அவரும் சாப்பிட மாட்டாரு சார்!
குமார் : 😑��
-------------------------------------------------------------------------------------------------------------
தீபக் : கள்ள நோட்டு அடிச்சு, நீ
எப்படி போலீஸ்ல மாட்டுன?
குப்புசாமி : ரிசர்வ் பேங்க் கவர்னர்,
கையெழுத்து போடுற இடத்துல, குப்புசாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...
தீபக் : 😜😜
-------------------------------------------------------------------------------------------------------------
அருண் : அவன்தான் அவங்க வீட்டுல கதவு
மாதிரி.
விக்கி : வீட்டுக்கு தூண்மாதிரின்னு
கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவு மாதிரி?
அருண் : அவன வீட்டுல யார் வேணாலும் சாத்து,
சாத்துன்னு சாத்துவாங்க!
விக்கி : 😁😁
-------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி : நீ செய்த குற்றத்துக்காக
உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
குற்றவாளி : எவ்வளவு வெயிட்டை தூக்கணும்
சார்?
நீதிபதி : 😡😡
-------------------------------------------------------------------------------------------------------------
ஆனந்த் : அனகோண்டாவுக்கும், அலுமினிய குண்டாவுக்கும்
என்ன வித்தியாசம்?
கார்த்திக் : தெரியலையே...
ஆனந்த் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா.
உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா...
கார்த்திக் : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------------
குறைக்க வேண்டியது... குறைக்கக்கூடாதது...!!
உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும்
சொல்கிறார்கள்.
அதனால் வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய
சில உப்புக்கள்...👇👇
கணவன்கள் - படபட(உ)ப்பு
மனைவிகள் - நச்சரி(உ)ப்பு
டீன் ஏஜ்கள் - பரபர(உ)ப்பு
மாணவர்கள் - ஏய்(உ)ப்பு
மாமியார்கள் - சிடுசிடு(உ)ப்பு
மருமகள்கள் - கடுகடு(உ)ப்பு
வழக்கறிஞர்கள் - ஒத்திவை(உ)ப்பு
மருத்துவர்கள் - புறக்கணி(உ)ப்பு
அரசியல்வாதிகள் - ஆர்ப்பரி(உ)ப்பு
முதியவர்கள் - தொணதொண(உ)ப்பு
ஆனால் சிறிதும் குறைக்கக்கூடாத, குறைக்க
தேவையில்லாத ஒரே உப்பு
சிரி(உ)ப்பு.😀😀
இது மனதுக்கும், உடலுக்கும் மிக சிற(உ)ப்பு.👌👌
-------------------------------------------------------------------------------------------------------------
எப்படிதான் பேச வேண்டும்?
👉 கோபமாக பேசினால், குணத்தை இழப்பாய்.
👉 வேகமாக பேசினால், அர்த்தத்தை
இழப்பாய்.
👉 வெட்டியாக பேசினால், வேலையை
இழப்பாய்.
👉 அதிகமாக பேசினால், அமைதியை இழப்பாய்.
👉 ஆணவமாக பேசினால், அன்பை இழப்பாய்.
👉 சிந்தித்து பேசினால்,
சிறப்போடு இருப்பாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக