Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 30 நவம்பர், 2019

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவில்

 Image result for அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவில் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

முன்னொரு காலத்தில் இத்தலம் 'பழமலை" என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் 'விருத்தாசலம்" என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. 'விருத்தம்" என்றால் 'பழமை." 'அசலம்" என்றால் 'மலை." காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. தேவாரத் திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.
 மூலவர் - விருத்தகிரீசுவரர் (பழமலைநாதர், முதுகுந்தர்).
அம்மன் - விருத்தாம்பிகை (பாலாம்பிகை - இளைய நாயகி). 
தல விருட்சம் - வன்னிமரம்.
 தீர்த்தம் - மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர மற்றும் குபேர தீர்த்தம்.
 புராணப் பெயர் - திருமுதுகுன்றம்.
 ஊர் - விருத்தாசலம்.
 மாவட்டம் -  கடலூர்.
  
தல வரலாறு :

இத்தலம் முன்னொரு காலத்தில் குன்றாக இருந்தது. விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோவிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோவிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோவிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபுவழியாகப் பேசப்பட்டு வருவதாகும்.
 இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னிராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் 'மணி முத்தா நதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்" என்று சொல்ல சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தலவரலாற்றுச் செய்தி.

தலச்சிறப்பு :
உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக கருதப்படுகிறது. விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் மணிமுத்தாற்றின் கரையில் அமைந்துள்ளது. விருத்தாசலத்திற்கு விருத்தகாசி, திருமுதுகுன்றம், பழமலை என பல பெயர்கள் உண்டு.
 நடுநாட்டு 22 சிவத்தலங்களில் ஒன்பதாவது தலமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், குமாரதேவர், ராமலிங்க அடிகளார் போன்ற பலரால் பாடப்பட்ட தலமாகும்.
 இங்கு மூர்த்தி, நலம், தீர்த்தம் என்ற மூன்றும் சிறப்புடன் ஒருங்கே அமைந்த தலம் என்பதால் 'காசிக்கு வீசம் அதிகம் விருத்தகாசி" என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் "சிவாயநம" என்ற ஐந்தெழுத்துக்கு ஏற்ப பிரகாரம், கோபுரம், கொடிமரம், நந்தி, தீர்த்தம் போன்றவை ஐந்தாகவே அமைந்துள்ளது.
 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 6 அடி பள்ளத்தில் ஆழத்து விநாயகர் கோவில் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். விநாயகருக்கு உள்ள ஆறு படை வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.
 இக்கோவிலின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இந்த மரம் பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் உயிருடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோவில் வெளிப்பிரக்காரத்தில் 22 ஆகம லிங்கத்திற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.
 கோவிலில் குரு சன்னதிக்கு அருகில் விநாயகர் சிலைக்கு முன்பு பாத வடிவில் பலி பீடம் இருக்கின்றது. இது பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக