இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மன அழுத்தம் இன்றைய தலைமுறையை வாட்டி வதைக்கும்
மிகக் கொடுமையான விஷயமாக மாறிவிட்டது. அதை குறைப்பதற்கு சிலர் மெனக்கெடுவார்கள். அதுவே
கூடுதல் மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும். அப்படி இருப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?
இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
மன அழுத்தம்
வாழ்க்கை என்றாலே நிறைய மேடு, பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும்.
அது வாழ்க்கையின் ஓட்டத்தில் மாறி மாறி வரத்தான் செய்யும். அதிலும் இன்றைய அவசர உலகத்தில்
எதற்கெடுத்தாலும் டென்ஷன், கவலை. அதனால் ஸ்டிரஸ் எனப்படும் மனஅழுத்தம் அதிகமாகிறது.
இதை எப்படி சரிசெய்வது என்பதே மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. மன
அழுத்தத்தைக் குறைப்பதற்கென தனியே பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்குச்
செல்பவர்களை நம்மால் பார்க்க முடியும். இப்படி நாம் ஓடி ஓடி சம்பாதிக்கும் பணத்தை இப்படி
தேவையற்ற விதங்களில் கொண்டு போய் செலவு செய்வதை விட, மன அழுத்தத்தைக் குறைக்கும் டீச்சராக
உங்களுக்கு நீங்களே மாற முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
உடற்பயிற்சி
உடல் சம்பந்தப்பட்ட அயற்சிக்கு மட்டுமல்ல, மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும்
சிறந்த மருந்தாக உடற்பயிற்சியே அமையும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம்முடைய மூளையில்
உள்ள நரம்புகள் இயக்கம் சீராகி அமைதி பெறும். உடலின் இயக்கத்தின் மூலம் எண்டோர்பின்
என்னும் ஹார்மோன் சுரப்பது தூண்டப்படுவதால், மனஅழுத்தம் குறைந்து, மன அமைதி உண்டாகும்.
நல்ல உறக்கத்தைப் பெற முடியும்.
சமையல்
சமைக்க வேண்டும் என்றாலே சிலர் என்ன சமைப்பது, எப்படி சமைப்பது
என மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் சமையல் செய்வது என்பது மிகப்பெரிய
ஸ்டிரஸ் பஸ்டர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாது
நிறைய பெண்கள் தன்னுடைய கோபத்தையும் சோகத்தையும் தொலைக்கும் இடமாக சமையலறையைத் தான்
தேர்வு செய்கிறார்கள்.
செல்லப்பிராணிகள்
இப்போதெல்லாம் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு
செல்லப்பிராணிகள் தான் உறவுகளாகவே இருக்கின்றன. நிறைய வீடுகளில் நாய், பூனை செல்லப்பிராணியாக
இருக்கும். சில வீடுகளில் புறா, கிளி, லல் ஃபேர்ட்ஸ் என வளர்ப்பார்கள். இப்படி ஏதாவது
ஒரு செல்லப்பிராணி உங்கள் வீட்டிலும் இருந்தால், நீங்களும் அதனோடு கொஞ்ச நேரமும் கொஞ்சி
விளையாடுங்கள். உங்களுடையஸ்டிரஸ் எல்லாம் பறந்து ஓடிவிடும்.
காமெடி ஷோ
டீவியில் காமெடி ஷோ ஏதாவது வைத்து வாய்விட்டு சிரிங்க. இருக்கவே
இருக்கு நம்ம வடிவேலு கலெக்ஷன். வடிவேறு, கவுண்டமணி, செந்திலை விட ஸ்டிரஸ் பஸ்டர் மருந்து
வுறு எங்கு இருக்கு?
சாக்லேட்
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உங்களுடைய மன அழுத்தம் பல மடங்கு
குறைவதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சாக்லேட்டுகளில் உள்ள அதிக அளவிலான
பிளவனாய்டுகள் அதிகம் உள்ளதால் உங்கள் நரம்புகளைக் கிளர்ந்தெழச் செய்து, ரத்த செல்களின்
உங்களுக்கு அமைதியையும் ரிலாக்ஸான மன நிலையையும் கொடுக்கிறது.
வேகமா கத்துங்க
இருக்கிறதுலயே ஸ்டிரஸ்ஸை விரட்டி அடிக்கிறதுக்கு மிகச்சிறந்த வழி
இதுதான். வீட்டில் உள்ள இருட்டான அல்லது மொட்டை மாடிக்குச் செல்லுங்கள். மனதையும் வாயையும்
விட்டு வேகமாகக் கத்துங்கள். உங்களுடைய மனஅழுத்தம் முழுக்க சட்டெனக் குறைந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக