Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 30 நவம்பர், 2019

கிளியின் பரிதாப நிலை..!

 Image result for கிளியின் பரிதாப நிலை..! 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ராஜா என்பவருக்கு பறவைகள் என்றால் கொள்ளை பிரியம். அதனால் ராஜா பறவைகளின் மீது அதீத அக்கறை கொண்டு பல பறவைகளையும், சிறு சிறு குருவிகளையும் வீட்டிலேயே வளர்த்து வந்தார். அந்த பறவை இனங்களுள் ஒரு அழகான பெண்கிளியும் இருந்தது.
அந்த கிளி கோவைப்பழம் போல சிவந்தவாயுடனும், மிகுந்த அழகுடனும், பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருந்தது. கிளியையும் மற்ற பறவைகளை போல் கூண்டுக்குள் அடைத்து சுவையான உணவிட்டு, சீக்கு வராமலிருக்க மருந்திட்டு பத்திரமாக பாதுகாத்து வந்தார்.
ஆனால் அந்தப் பெண்கிளி மேலே பறந்து செல்லும் பறவைகளையும், தன் சக இனமான கிளிகளையும் பார்த்து பல நாட்களாய் நாம் சுதந்திரமாக பறப்பது எப்போதென ஏக்கத்திலேயே இருந்தது. அந்த நேரத்தில் வானத்தில் கூட்டமாக பறந்து சென்ற கிளிகளில் ஒரு ஆண்கிளி கூண்டு கிளியை நெருங்கி இப்படி அடைப்பட்டு இருக்கிறாயே, ஒரே உணவையே தினமும் உண்கிறாயே, என்னுடன் வா சுதந்திரமாக பறக்கலாம், வித விதமான உணவு உண்ணலாம் என தந்திர வார்த்தை கூறியது.
ஏற்கனவே ஏக்கம் கொண்டிருந்த பெண்கிளி அந்த மந்திர வார்த்தைக்கு இணங்கியது. தனது எஜமானன் கண் அயர்ந்த வேளையில் ஆண்கிளியின் துணைக்கொண்டு கூண்டை விட்டு வெளியேறியது. பின் மிக சுதந்திரமாக வானில் உயர உயர சிறகை விரித்து பறந்தது. ஆனால் அதற்கு ஆபத்து இருப்பதை அது உணரவில்லை.
உயர உயர பறந்த கிளிக்கு வேடர்களாலும், கழுகுகளாலும் பெரும் ஆபத்து வந்ததை கண்ட ஆண்கிளி மற்ற கிளிகளின் துணைக்கொண்டு பெண்கிளியை காப்பற்றியது. அழகுடன் இருந்த பெண்கிளி மீது அந்த ஆண்கிளி மையல் கொண்டது. தனியாக காலம் கழித்த பெண்கிளி தனக்கு ஒரு ஜோடி கிளி வருவதை எண்ணி மிக சந்தோஷம் அடைந்தது.
ஆனால் அந்த பெண்கிளிக்கு சந்தோஷம் நிலைக்கவில்லை. உடனே பிரச்சனை ஆரம்பித்தது. கூட்டு கிளியில் ஒன்றான அதன் ஜோடி கிளி அந்த ஆண் கிளியின் செய்கையை மற்ற கிளிகளிடம் கூறி அக்கிளிகளின் துணைக்கொண்டு கூண்டுகிளியை கொத்தி துரத்தியது.

காயம்பட்ட பெண்கிளி மதிகெட்டு நம் மரியாதையை இழந்து விட்டோம் என்று வருந்தியது. நாம் கூண்டிற்கே சென்றுவிடலாம் என தீர்மானித்து கூண்டிற்கு திரும்பியது. ஆனால் அந்த கூண்டில் வேறு ஒரு கிளி இருந்தது. தான் வாழ்ந்த கூண்டில் வேறு ஒரு கிளி இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்தது.
மனம் தாங்காமல் அதன் கூண்டிற்குள் நுழைய முயற்சி செய்தது அந்த பெண்கிளி. அது முயற்சிக்கும் நேரம் ராஜா அந்த பக்கம் வந்தார். ஏற்கனவே கூண்டில் இருந்த கிளியை கவர்ந்து சென்ற கிளிதான் வந்துள்ளதாய் தவறாக எண்ணி அக்கிளியை விரட்டி அடித்தார்.
அந்த பெண்கிளி கூண்டு கிளியாகவும் வாழ முடியாமல், கூட்டு கிளிகளோடும் வாழ முடியாமல் பயங்கர விரக்தியுடன் தனிமைப்படுத்தபட்டது.

நீதி :
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் துன்பம்தான் உண்டாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக