இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும்.
வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது.
ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி.
இவ்வளவு சிறப்பு மிகுந்த வைகாசி
மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?
இந்த மாதத்தில்
பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு
ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். இவர்கள் யோசனைகள் சொல்வதில் சிறந்தவர்கள். இவர்களின்
பலம் பொறுமை தான். இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள
வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை எளிதாக அடையாளம் கண்டு
கொள்வார்கள்.
இவர்களுக்கு
இயற்கையிலேயே வசீகரத் தோற்றம், வாசனை திரவியங்கள் மீது பற்றுதல், உயர்தர ஆடை,
ஆபரணங்கள் அணிவதில் பிரியம் இருக்கும். பெண்களிடம் நயமும், நளினமும் கலந்திருக்கும்.
இவர்கள் இன்பம் துன்பம், நிறைகுறை போன்றவற்றை சமமாக பாவிப்பார்கள். இவர்கள் எந்த
வேலையில் ஈடுபட்டாலும் அடிமுதல் நுனிவரை தெரிந்து வைத்திருப்பார்கள். வருத்தம்,
கோபம் இருந்தாலும் அவற்றை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
குடும்பம் :
குடும்பத்தில்
இவர்களின் பங்கு அதிகம் இருக்கும். உற்றார், உறவினர், உடன்பிறப்பு எல்லோரையும்
அனுசரித்துச் செல்வார்கள். சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள். குற்றம்,
குறைகளை சரியான நேரத்தில் சுட்டிக் காட்ட தயங்கமாட்டார்கள். இவர்கள் கையில்
எப்பொழுதும் பணம் புரண்டு கொண்டே இருக்கும். சுய தேவைக்கும், ஆசைக்கும் பணம் செலவு
செய்ய தயங்கமாட்டார்கள்.
ஆரோக்கியம் :
உஷ்ணம், வயிற்றுக்
கோளாறுகள் அடிக்கடி உண்டாகும். ரத்த சம்பந்தமான குறைபாடுகள் இருக்கும். சைனஸ்,
தும்மல், ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட நேரிடும். வயது ஆகஆக மறதி நோய் வர
வாய்ப்புள்ளது. நரம்புத் தளர்ச்சியும் இருக்கும்.
பயணங்கள் :
பயணங்களில் அதிக
ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். பக்தி சுற்றுலாக்கள், புனித ஸ்தலங்களுக்கு
செல்வது மிகவும் பிடிக்கும். உல்லாசப் பயணங்களிலும் விருப்பம் உடையவர்கள். தனிமையை
விரும்புபவர்கள், இயற்கையை, கலையை, அழகை ஆராதிப்பவர்கள். பயண அனுபவங்களை ரசனையுடன்
மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
திருமணம் :
நல்ல ஆற்றலும்,
நிர்வாகத் திறமையும் உள்ள பெண் வாழ்க்கைத் துணைவியாக அமைவார்கள். சில சமயங்களில்
இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். புதன், செவ்வாய், சுக்கிரன் அனுகூலமாய்
இருக்கப் பிறந்தவர்கள், மனைவி மூலம் பல யோக, போக, சுக பாக்கியங்களை
அனுபவிப்பார்கள். ஒரு சிலருக்கு உயர்ந்த பதவி, புகழ், செல்வம், செல்வாக்குள்ள
மனைவி அமைவதற்கான யோகமும் உண்டு.
தொழில் :
தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகியவற்றில் நிர்வாகத்
திறமையும், சமயோசித புக்தியும், யுக்தியும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பல்துறை
வித்தகர்களாகவும், கலைத்துறையில் சாதனை புரியும் யோகமும் உண்டு. சிறந்த
பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், பதிப்பகங்களை நடத்துபவராகவும், அச்சகத்
தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக