Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 30 நவம்பர், 2019

சிற்பங்களின் அழகில் மிளிரும்... சதுரங்கப்பட்டினம்..!

 Image result for சதுரங்கப்பட்டினம்..! 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

சென்னையிலிருந்து ஏறத்தாழ 76கி.மீ தொலைவிலும், மாமல்லப்புரத்திலிருந்து ஏறத்தாழ 21கி.மீ தொலைவிலும், அமைந்துள்ள கட்டுமானங்களில் அழகாக மிளிரும் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கிறது சதுரங்கப்பட்டினம்.

 சிறப்புகள் :

 சதுரங்கப்பட்டினத்தில் அழகிய தூண்கள், மாடங்கள், சிற்ப வேலைபாடுகளைக் கொண்டுள்ள கூரைகள் என வரலாற்றுக் கட்டுமானங்கள் அமைந்துள்ளன. இந்த சிற்பங்கள் நம்முடைய கண்களுக்கு அற்புதமாக காட்சியளிக்கும்.

 இந்தப் பகுதி பருவக் காலங்களில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். மாலை நேரங்களில் மேகமூட்டத்தினால் இந்த இடம் நம் கண்களுக்கு ரம்மியாக தோன்றும். இதன் அழகை பார்த்து ரசித்துக் கொள்ளலாம்.

 இங்கிருக்கும் மதில் சுவர்களில் ஏறி நிற்கும்போது அருகில் இருக்கும் சர்ச்சின் மணியோசை காதிற்கு இனிமையாக இருக்கும். சதுரங்கப்பட்டினத்தில் இருக்கும் கடற்கரைகள் அழகிய சவுக்கு தோப்புகளுடன்,  அந்த இடத்தை நிழலால் நிரப்பி மனதை மயக்கும். இந்த இடம் இயற்கை காட்சிகளால் நம் கண்களை கவர்கின்றது.

சென்னையின் அருகேயுள்ள மிகப் பிரம்மாண்டமான சுற்றுலாத் தலங்களில் சதுரங்கப்பட்டினம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு இடம் ஆகும். இது கட்டுமானங்களில் சிறந்த வரலாற்று சுற்றுலாத் தலமாகவும் திகழ்கின்றன. சதுரங்கப்பட்டினத்தை சத்ராஸ் என்றும் அழைப்பார்கள்.

 பிறகு இங்கு ஒரு பழமையான கோட்டையும் உள்ளது. குடும்பத்துடன் சென்று களிக்க ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் இந்த இடம் விளங்குகின்றது.

எப்படி செல்லலாம்?

 சென்னை மற்றும் மாமல்லப்புரத்தில் இருந்து சதுரங்கப்பட்டினத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்லலாம்?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

மாமல்லப்புரத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக