இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வேலைக்கு
செல்லும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி... அவர்கள் குடும்பத்தில்
உள்ள நபர்களை கவனித்துக் கொண்டு தங்களை தானே கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது இல்லை
என்பதுதான் உண்மை.
தற்போதைய
காலக்கட்டத்தில் பெண்கள் அதிகமாக எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
நம்
உடலில் மிக முக்கிய பங்காற்றுவது எலும்பு... அதற்கும் தேவையான சத்துக்கள் கிடைத்தால்தான்
நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நமது
உடலில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கால்சியம் சத்துக்கள் பெரிதும் உதவுகிறது.
மேலும்
இந்த கால்சியம் சத்துக்கள் நம் உடம்பில் குறைந்துவிட்டால், எலும்புகள் தேய்மானம் அடைவதோடு,
இரத்த செல்களின் உருவாக்கத்திலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே
எலும்புகளின் தேய்மானக் குறைபாடுகளை போக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த
உணவுகளை சாப்பிடுவதுதான் நல்லதாகும். இப்போது இந்த எலும்புகளின் தேய்மானத்தைத் தடுக்க
உதவும் உணவுகள் பற்றி இங்கு காண்போம்.
பால்
மற்று தயிரில் கால்சியம் அதிகளவு நிறைந்துள்ளது. தினமும் ஒரு டம்ளர் பால் குடித்து
வந்தால் கால்சியம் சத்துக்கள் நமது எலும்புகளுக்கு கிடைக்கும்.
மேலும்
முட்டை, வெண்ணெய் போன்ற உணவுகளிலும் கூட புரதச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள்
அதிகளவு நிறைந்துள்ளது.
அடிக்கடி
நாம் உலர் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நமது எலும்புகளுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள்
அதிகளவு கிடைக்கும்.
எனவே
ஒரு நாளைக்கு 5 உலர் அத்திபழ துண்டுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கலாம்.
அதேபோல்
பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகளில், நம் உடலுக்குத் தேவையான தாது உப்புகளுடன்
கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் அதிகளவு நிறைந்துள்ளது.
இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புகளை தேய்மானத்தில் இருந்து தடுக்கலாம்.
அகத்திக்கீரை,
முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும்
வெற்றிலையில் அதிக அளவில் கால்சியம் நிறைந்துள்ளது.
எள்
கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளுடன் வெல்லம் சேர்த்து உருண்டைகளாக செய்து
குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் இரண்டு எள் உருண்டையில் 1400 மி.கி. கால்சியம்
உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம்.
எலும்பு
தேய்மானத்திற்கு மிக அருமையான மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை
அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்கள் விரைவில் வளரவும் உதவுகின்றது.
கருப்பு
உளுந்து, கொள்ளு, ராகி மற்றும் சோயாபீன்ஸ் போன்ற உணவுகளிலும் கால்சியம் சத்துக்கள்
அதிகமாக உள்ளது. எனவே தினமும் நம்முடைய உணவில் இந்தப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
எனவே
பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாகவும்,
ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக