இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை பிளாட்பாரத்தில் தங்கியிருந்த நண்பர்களுக்குள்
ஏற்பட்ட கடன் தகராறு கொலையில் முடிந்திருக்கிறது.
சென்னை கே.கே.நகர் அண்ணா மெயின்ரோடு, கே.வி.சண்முகம்
சாலை சந்திப்பில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு
தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார்
தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, இறந்துகிடந்தவரின்
பெயர் ராபர்ட் (35) என்பதும் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர்
என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பிளாட்பாரத்தில் நேற்றிரவு தங்கியவர்களிடம்
போலீஸார் விசாரித்தனர். அப்போது, ராபர்ட்டுக்கும் அவரின் நண்பர் சிவக்குமாருக்கும்
இடையே நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறினர். சிவக்குமாரைப் பிடித்த போலீஸார்
அவரிடம் விசாரித்தபோது, ராபர்ட் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``அருப்புக்
கோட்டையைச் சேர்ந்த ராபர்ட், கடந்த 18 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை
செய்துவந்தார். கே.கே.நகர் பகுதியில் உள்ள பிளாட்பாரம்தான் ராபர்ட்டுக்கு வீடு. அந்த
பிளாட்பாரத்தில் தங்கியிருந்த சிவக்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவக்குமாரின்
சொந்த ஊர் விழுப்புரம். ஒரே இடத்தில் தங்கியிருந்ததால் இருவரும் நெருங்கிய நண்பர்களாகப்
பழகிவந்துள்ளனர்.
சிவக்குமாரிடம் ராபர்ட் 250 ரூபாயைக் கடனாக வாங்கியுள்ளார்.
அதில் 125 ரூபாயைக் கொடுத்துவிட்டார். மீதம் 125 ரூபாயைக் கொடுக்காமல் இழுத்தடித்துவந்துள்ளார்.
நேற்று இரவு, இருவரும் மது அருந்தியபோது ராபர்ட்டிடம் கடனைக் கேட்டுள்ளார் சிவக்குமார்.
அப்போது போதையில் இருந்த ராபர்ட், சிவக்குமாரின் குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார்.
இதனால் பிளாட்பாரத்திலேயே இருவரும் கட்டிப்புரண்டு
சண்டை போட்டுள்ளனர். பிறகு, பைக்கை எடுத்துக்கொண்டு சிவக்குமார் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
அப்போது ராபர்ட், மீண்டும் சிவக்குமாரை வம்புக்கு இழுத்துள்ளார். இதனால் பைக்கை விட்டு
கீழே இறங்கியவர், காலியான பீர்பாட்டிலை உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில் ரத்தம் வெளியேறிய நிலையில், சம்பவ இடத்திலேயே
ராபர்ட் இறந்துவிட்டார். ராபர்ட்டை கொலைசெய்த குற்றத்துக்காக சிவக்குமாரை கைதுசெய்துள்ளோம்.
ராபர்ட்டின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது"
என்கின்றனர்.
சிவக்குமார் போலீஸாரிடம் பேசுகையில், ``நானும் ராபர்ட்டும்
மது அருந்தினோம். அப்போது எனக்குத் தர வேண்டிய கடன் தொகை 125 ரூபாயை ராபர்ட்டிடம் கேட்டேன்.
அப்போது, அவர் என்னை அசிங்கமாகத் திட்டினார். அதோடு, என்னைப் பெற்ற தாயை அவதூறாகப்
பேசினார். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் கொலைசெய்தேன்"
என்று கூறியிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக