சிரிக்க சிரிக்க சிரிப்பு...!
கணவன் : புதுசா வாங்குன பைக்குல உன் பேர் எழுத சரியான இடம் கிக்கர் தான்டி.
மனைவி : ஏங்க அங்க எழுதனும்னு சொல்றீங்க?...
கணவன் : எத்தன நாளைக்கு தான் நானே உதை வாங்குறது.
மனைவி : 😠😠
---------------------------------------------------------------------
பாபு : டேய் விசேஷ வீட்ல ஏன் வாழைமரம் கட்டுறாங்க?
குமார் : அத கட்டலன்னா கீழ விழுந்திரும்ல அதான் கட்டுறாங்க.
பாபு : 😂😂
---------------------------------------------------------------------
பொன்மொழிகள் !!
அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே!
உன்னை காப்பற்ற வருபவர் யார் உள்ளார்?
உன்னை காப்பற்ற வருபவர் யார் உள்ளார்?
நீயே உன் காவலன்.
ஆதலால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!
---------------------------------------------------------------------
வாய்யே வெல்லும்...!
ஒரு நாட்டின் அரசர் இறந்துவிட்டார். அவருக்கு வாரிசு இல்லை. வாரிசை தேர்ந்தெடுக்க அமைச்சர் ஒரு போட்டி நடத்தினார். போட்டியில் கலந்து கொள்ள முரசு ஒலித்து இளைஞர்களை அழைத்தார்கள்.
25 இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். அமைச்சர் அந்த இளைஞர்களிடம் நெல் விதைகளை கொடுத்தார். இந்த விதைகளை உங்கள் வயலில் விதையுங்கள்.
யார் வயலில் நெல் பயிர் உயரமாக வளர்கிறதோ அவர் அரசராக முடி சூட்டப்படுவார் என்று அமைச்சர் அறிவித்தார். இளைஞர்கள் தங்கள் வயலுக்கு சென்று நெல்லை விதைத்தார்கள்.
நீர் பாய்ச்சினார்கள். நிறைய உரம் வைத்தார்கள். இரண்டு மாதம் கழித்து வயல்களைப் பார்க்க அமைச்சர் சென்றார். எல்லா வயல்களிலும் நெல் பயிர் நன்கு வளர்ந்து நின்றது.
ஒரே ஒரு வயலில் மட்டும் பயிர் விளையவே இல்லை. அந்த இளைஞனைப் பார்த்து உன் வயலில் மட்டும் ஏன் பயிர் விளையவில்லை? என்று அமைச்சர் கேட்டார். ஐயா நீங்கள் கொடுத்த விதையைத்தான் விதைத்தேன். அது முளைக்கவே இல்லை என்று இளைஞன் சொன்னான்.
அப்போது அமைச்சர் கூறினார். நான் கொடுத்த நெல் முளைக்காது. ஏனென்றால் அது அவித்த நெல்.
அது முளைக்காமல் போகவே மற்ற இளைஞர்கள் வேறு நெல்லை விதைத்து நீர் பாய்ச்சி நல்ல உரம் போட்டு பயிரை வளர்த்திருக்கிறார்கள்.
ஆனால் நீ மட்டும் அப்படிச் செய்யவில்லை. உண்மையாக நடந்து கொண்டாய். அதனால் நீ தான் அரசர் ஆவதற்கு தகுதியானவன் என்றார்.
---------------------------------------------------------------------
வெற்றி...!!
வெற்றி...!!
விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் மட்டும் சரியாக இருந்தால்
வெற்றி என்னும் பட்டம் நம் வசமே...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக