Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 செப்டம்பர், 2020

கணவனின் பிரச்சனையை தீர்த்த மனைவி... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
பாலு : நாம போகும்போது பூனை குறுக்க போச்சுன்னா என்ன அர்த்தம்...?
சோமு : அதுவும் எங்கேயோ போகுதுன்னு அர்த்தம்...
பாலு : 😬😬
-------------------------------------
சீதா : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடுறதுக்கு மறந்துட்டேன்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...!
ராமு : பரவாயில்லை, நீ சமைக்க போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்துல புளிய கரைச்சிடுச்சி...!
சீதா : 😏😏
-------------------------------------
மனைவி : கணவன், மனைவி சண்டைனா நாலு சுவற்றுக்குள்ளதான் இருக்கணும்...
கணவன் : அப்ப தப்பிச்சு ஓடக்கூட எனக்கு உரிமை இல்லையா?...
மனைவி : 😡😡
-------------------------------------
கணவனின் பிரச்சனையை தீர்த்த மனைவி... சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவர், டாக்டர் நீங்கள்தான் என்னை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்றார்.

உங்களுக்கு என்ன நோய்? விளக்கமாக சொல்லுங்கள்? என்று கேட்டார் டாக்டர்.

இரவில் நான் கட்டிலின் மேல் படுத்தவுடன் கட்டிலின் கீழ் யாரோ இருப்பதை போல் தோன்றுகிறது. கட்டிலை விட்டு கீழே இறங்கி பார்க்கிறேன். அங்கு யாருமே இல்லை. பயம் போவதற்காக நான் கட்டிலின் கீழேயே படுத்து கொள்கிறேன்.

இப்பொழுது கட்டிலின் மேல் யாரோ படுத்து கொண்டிருப்பதை போல் தோன்றுகிறது. இப்படியே இரவு முழுவதும் கட்டிலின் மேலும், கீழும் மாறி மாறி படுத்து கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருக்கிறது என்றார்.

உங்களை குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் என்னை இரண்டு ஆண்டுகள் பார்க்க வேண்டும். என்னை ஒவ்வொரு முறை சந்திப்பதற்கும் ரூ.100 கட்டணம் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார் டாக்டர்.

நிறைய செலவாகும் போல இருக்கிறதே?... என்னால் இவ்வளவு தொகையை தர முடியுமா?... என்று தெரியவில்லை. எதற்கும் என் மனைவியை கேட்டு அடுத்த வாரம் சொல்கிறேன், என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் அவர்.

ஒரு வாரம் கழித்து டாக்டருக்கு போன் வந்தது. அதில் அவர், டாக்டர் என் மனைவி என் நோயை குணப்படுத்திவிட்டாள், என்றார்.

டாக்டரால் இதை நம்ப முடியவில்லை, எப்படி? என்று கேட்டார்.

நான் படுக்கும் கட்டிலின் கால்களை என் மனைவி வெட்டிவிட்டாள், என்று பதில் வந்தது.😆😆

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக