Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 டிசம்பர், 2019

மனைவியின் செயல்... அப்படியே ஆடிப்போயிட்டார் கணவர்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்!


சிரித்து மகிழுங்கள்...!

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக,

ஆசிரியர் : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் எதுவும் சொல்லமாட்டேன் என்றார். மாணவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான்.
ஆசிரியர் : பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்.
மாணவன் : இல்லை டீச்சர். நீங்க மட்டும் தனியா நின்னுக்கிட்டு இருக்கீங்க... எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால்தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.
ஆசிரியர் : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------------
அப்பா : டே‌ய்.. அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க?
மகன் : கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ போ‌ச்சு‌ப்பா?
அப்பா : சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம்.
மகன் : அதா‌ன்பா ரொ‌ம்ப நேரமா கொடு‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். அது வா‌ங்கவே மா‌ட்டே‌ங்குது‌ப்பா...
அப்பா : 😩😩
-------------------------------------------------------------------------------------------------------------
இத மட்டும் பண்ணாதீங்க...!!
காலங்காத்தால மனைவி கணவனிடம் ஓடி வந்தாள்...!
கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தாள்....
கொஞ்சம் நியூஸ் பேப்பர் கொடுங்கன்னு கேட்டாள்...?
கணவன் மனைவியிடம்,

நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப்போற...?
உலகம் எங்கிருந்து எங்கயோ போயாச்சு..
நீ இன்னும் நியூஸ் பேப்பர் கேட்கறே...?
இந்தா என்னோட Ipad எடுத்துக்கோ...!

மனைவியும் Ipad எடுத்துக்கிட்டு போய்...
அதை சமையல் அறையில் இருந்த,
கரப்பான்பூச்சிய ஒரு அடி போட்டாள்...!
கணவன் நிலைமையை நினைச்சு பாருங்க...!

நீதி : மனைவிக்கிட்ட உங்க புத்திசாலித்தனத்தை காட்ட முயற்சிக்காதீங்க...!
-------------------------------------------------------------------------------------------------------------
எதற்கு இடமளிக்கக்கூடாது?

அற்பர்களின் வார்த்தைகள் உங்கள்
மனதில் பதிவதற்கு இடமளிக்காதீர்கள்...
குறை கூறுவதற்கென்றே சிலர்
பிறவி எடுத்திருக்கிறார்கள்...
அவர்களைப் பற்றி கவலைப்படாமல்
முன்னேறி கொண்டே இருங்கள்...
முள்ளும் ஒருநாள் மலராகும்.
விமர்சனம் கூட விருதாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------
இது சிரிக்க மட்டுமே...!

டீச்சர் : பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார்?
மாணவன் : சிவன் துணிகள் உடுப்பதில்லை...
அதனால் துணி துவைக்கும் வேலை குறைவு...
எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால்
வெளிச்சமாக இருக்கும்.
அதனால் கரண்ட்பில் கட்ட தேவையில்லை.
ஜடாமுடியில் இருந்து கங்கை நதி கொட்டுவதால்,
மோட்டார் போட்டு டேங்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்.
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால்,
சமைக்க தேவையில்லை.
சிவனுக்கு அம்மா, அப்பா இல்லாததால்,
மாமியார் தொல்லை இல்லை என்றான்...
மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திரிக்கவே இல்லை...😂😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக