Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 டிசம்பர், 2019

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில்

 Image result for அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில்
ருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 64வது தேவாரத்தலமாகும்.

மூலவர் : ரத்னகிரீஸ்வரர்
அம்மன் : கரும்பார் குழலி
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : காவேரி தீர்த்தம்

தல வரலாறு :

 இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரமாகும். சோதிலிங்க வடிவமானது. மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை.

 ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது, மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான். இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினார். அந்த தழும்பு இன்னும் சுவாமியின் மீது உள்ளது.

தல பெருமை :

 இறைவன் 9 ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன. சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை.

திருவிழா :

பிரதோஷ காலங்கள், குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி கிரிவல நாட்கள் வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகள், மாதப்பிறப்பு நாட்கள், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக