>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 29 ஜனவரி, 2020

    எதிர்பார்ப்பு... ஏமாற்றம்... இறுதியில் கிடைக்கும் பரிசு? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

    பாபு : டேய்! ஒரு 10 ரூபாய் இருந்தா கொடு!
    மணி : எங்கிட்ட சுத்தமா இல்ல...
    பாபு : பரவாயில்ல கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
    மணி : 😩😩
    ---------------------------------------------------------------------------------------------------
    தொண்டன் 1 : நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு...
    தொண்டன் 2 : எப்படி...?
    தொண்டன் 1 : எதிர் கட்சிக்காரங்க வெச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டு வந்திருக்காரு!
    தொண்டன் 2 : 😂😂
    ---------------------------------------------------------------------------------------------------
    ராஜா : உன் மனைவி உடம்பை குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா?
    அருண் : ஓ இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது.
    ராஜா : நிஜமாவா?
    அருண் : எடை குறைஞ்சது குதிரைக்குன்னு சொல்ல வந்தேன்.
    ராஜா : 😝😝
    ---------------------------------------------------------------------------------------------------

    மாதேஸ் : இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
    குமார் : தங்க வீடு கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
    மாதேஸ் : 😡😡
    ---------------------------------------------------------------------------------------------------
    உண்மைகள்...!!
    உண்மைகள் எப்போதும்...

    👉 நிராகரிக்கப்படும்...

    👉 வெறுக்கப்படும்...

    👉 ஒதுக்கப்படும்...

    👉 மறைக்கப்படும்... ஆனால்,

    👉 நிச்சயம் ஒருநாள் வெளிப்படும்...
    ---------------------------------------------------------------------------------------------------
    எவை விலைமதிப்பற்றவை?
    தோல்விகள் நல்ல பாடங்கள் தருபவை....

    படிப்போம்..!!

    வெற்றிகள் கண்ணாடி போன்றவை...
    பாதுகாப்போம்...!!

    நல்ல உறவுகளும், நல்ல நட்பும் விலைமதிப்பற்றவை...
    தக்க வைத்துக் கொள்வோம்....!!
    வாழ்க்கை...!!
    எல்லா எதிர்பார்ப்புகளிலும் ஏமாற்றம் என்ற பரிசும்...
    எல்லா ஏமாற்றத்திற்கு பிறகு பக்குவம் என்ற பரிசும்...
    கிடைப்பதற்கு பெயர்தான் வாழ்க்கை...
    ---------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

    பொருள் :

    பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சி சேர்த்து, செலவு செய்யும்போது பகுந்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக