சிரிக்கலாம் வாங்க...!!
ராம் : குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம்.
குமார் : எப்படி?
ராம் : அது மேலதான் 'றுநiபாவ" போடறோம் இல்ல?
ராம் : 😜😜
-------------------------------------------------------------------------------------------------------
காவலர் : எதுக்கு கோயில்ல இருந்த பிள்ளையார் சிலையை திருடுன?
திருடன் : இதுதாங்க ஐயா என் முதல் திருட்டு. அதான், தொழிலுக்கு ஒரு பிள்ளையார் சுழியா இருக்கட்டுமேன்னு திருடினேன்.
காவலர் : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------
பொறுமையே பெரியது !!
கோபப்பட்டு வென்றுவிட்டாய் என்றால் உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல...
அதைக் தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம் !!
-------------------------------------------------------------------------------------------------------
இது உண்மை அல்லவா?
🌟 எப்பொருளும் உன்னுடன் வருவதில்லை உன் இறப்பிற்கு பின்னால்...
🌟 பொன் நகையை அணிவதை விட புன்னகை ஒன்றே பலரையும் நம்மை நேசிக்க வைக்கும்...
🌟 படிக்கும் குழந்தைகளின் மனதில் பாடங்களை விட படங்களே மனதில் பதிகின்றன...
-------------------------------------------------------------------------------------------------------
இது வேடிக்கைக்காக மட்டுமே !!
வெளிநாட்டிலிருந்து ஒரு கார் தண்ணீரிலே இந்தியா வந்தது எப்படி? - கப்பலில் வந்தது.
காய்கறி வாங்கிச் செல்லும்போது, மழை வந்தது, நனையவில்லை அது எப்படி? - காய்கறியில் குடை மிளகாய் இருந்ததால்தான் !!
வீட்டில் படம் பார்த்தவன், அலறிக் கொண்டு ஓடி வந்தான். ஆனால், அவன் பார்த்தது பேய்ப் படம் இல்லை, பின் ஏன் அலறினான்? - பாம்பு படம் எடுத்ததைப் பார்த்தான் அதான்.
-------------------------------------------------------------------------------------------------------
மனைவி என்ற வார்த்தைக்கு ஏன் இத்தனை அர்த்தங்கள் !!
👫 நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பதால் 'மனைவி" என்றும்., 😍
👫 நமது வாழ்வில் கடைசிவரை தொன தொன வென்று துணையாய் வருவதால் 'துணைவி" என்றும்., 😍
👫 பொன் நகை வாங்கி தருமாறு நம்மை ஆட்டிவைப்பதால் 'பொண்டாட்டி" என்றும்., 😍
👫 காஃபியை 🍵 ஆத்திக்கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால் 'ஆத்துக்காரி" என்றும்., 😍
👫 வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத றi-குi போல் நம்மேல் கண்காணிப்பு அலைவரிசையாய் தொடர்வதால் றுகைந என்றும் கூறுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக