இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நரசிம்மர் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு குடைவரைக் கோலிலாகும். இத்தலம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற பல்லவ மன்னரால் அமைக்கப்பட்டது என்று கோயிலில் அமைந்திருக்கும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.தல வரலாறு :
அசுரர்களின் தலைவரான இரணியன் தன் நாட்டு மக்களிடம் யாராவது நாராயண நம என்று சொன்னால் நாக்கை துண்டித்து விடுவேன். இரண்யாய நம என்றே சொல்ல வேண்டும். நானே கடவுள் என உத்தரவு போட்டு விட்டான். பெற்ற மகனான பிரகலாதனுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என சொல்லி விட்டான். ஆனால் மகன் மறுத்து விட்டான். விளைவு பிரகலாதன் சித்ரவதை செய்யப்பட்டான். எதற்கும் மசியாத பிரகலாதன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என் நாராயணன் என சொன்னதும், அருகிலிருந்த தூணை ஆவேசமாக உடைத்தான் இரண்யன். தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்தார் நாராயணர்.
உலகமே அஞ்சி நடுங்கியது. வீரவசனம் பேசிய இரண்யன் கலங்கிப் போனான். அவனது வீரம், கோபம் அடங்கிப் போனது. நாராயண மூர்த்தி அவனது உடலை கூரிய நகங்களால் கீறி கொன்று விட்டார். உக்கிரத்துடன் இருந்த நரசிம்மரின் கோபத்தை தணிப்பதற்காக அவரது மடியில் மகாலட்சுமி அமர்ந்தாள்.
கண்டகி நதிக்கரையில் இருந்த நரசிம்ம மூர்த்தியின் திருக்கோலம் கண்டு வணங்கிய ஆஞ்சநேயர், சஞ்சீவி மலையை பெயர்த்தெடுத்து வந்தார். வான்வழியில் வந்த அவர், வைகறையில் தவம் செய்ய வேண்டி, இங்குள்ள கமலாலய குளக்கரையில் மலையை இறக்கி வைத்தார்.
தவம் முடித்து, மீண்டும் மலையை தூக்க முயற்சித்த போது, முடியாமல் தவித்தார். அப்போது அன்னை மகாலட்சுமி, என் எண்ணப்படியே நீ நரசிம்ம மூர்த்தியை இங்கு கொண்டு வந்தாய். எனவே, நீ ராமனுக்கு செய்யும் கடமைகளை முடித்து, நரசிம்ம மூர்த்தியை வணங்கி வீடு பேறு பெறுக என்று உத்தரவிட்டார். அதன்படியே தொழுத கையுடன் நின்று நரசிம்ம மூர்த்தியை வணங்குகிறார் அனுமன்.
தல பெருமை :
வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள அரி நாமகிரித் தயார் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஸ்ரீநரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு இரணியனை வதைத்த பின் ரத்தக்கரையுடன் கூரிய நகங்களுடன் பகவான் காட்சி தருகிறார். உலகில் சிவன் சில இடங்களில் மட்டுமே தலையில் பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார். அவற்றில் ஒன்று இத்திருத்தலம்.
பிராத்தனை :
நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி தாயாரை பூஜிக்க சகல செல்வங்களும், பில்லி, சூனியம் போன்றவை ஒரு மண்டல காலத்திற்குள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.
நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாற்றி புதுவஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக