இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு
ஊரில் ஒரு அம்மன் கோவில் இருந்தது. அந்த அம்மன் கோவிலுக்கு அருகில் இருந்த
மரத்தில் குரங்கு ஒன்று வசித்து வந்தது. அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு
அம்மனை வேண்டி உண்ணாமல் விரதம் இருப்பதைப் பார்த்து தானும் அடுத்த ஜென்மத்தில்
மனிதனாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதம் இருக்க முடிவு செய்து
விரதத்தைத் தொடங்கியது. அதற்காக அந்த குரங்கு, தான் விரதம் இருப்பதை மறந்து விடக்கூடாது
என்பதற்காக தான் விரதம் இருப்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருந்தது.
ஆனால்,
திடீரென்று குரங்கிற்கு பயம் தோன்றியது. குரங்கு தன் மனதிற்குள், நான் இதுவரை
விரதம் இருந்ததில்லை. எதுவும் சாப்பிடாமல் இருந்தால் என் உடல் சோர்ந்து
போய்விடும். பிறகு என்னால் நடக்கக்கூட முடியாது. மேலும், உணவு சாப்பிடாமல்
இருந்தால் நான் இறந்து போய்விடுவேன் என்று நினைத்த குரங்கு பழ மரங்கள் இருந்த
பகுதிக்கு சென்று விரதம் இருக்க முடிவு செய்தது.
அங்கு
சென்ற பிறகும் குரங்கிற்கு சந்தேகம் தீரவில்லை. விரதம் முடிந்த பிறகு என்னால் மரத்தின்மீது
ஏறக்கூட சக்தியில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? என்று நினைத்தது. அதனால்
பழங்கள் நிறைந்திருந்த மரத்தின் ஒரு கிளையில் போய் அமர்ந்து கொண்டது. குரங்கு
பழங்கள் நிறைந்திருந்த கிளையில் அமர்ந்து கொண்டு, ஒருவேளை விரதத்தை முடித்த பிறகு
கையை நீட்டி பழங்களைப் பறிக்க என் உடலில் சக்தியில்லாமல் போய்விட்டால் என்ன
செய்வது? என்று நினைத்தது. எனவே சில பழங்களை பறித்து தன் கைகளில் வைத்துக்கொண்டு
விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தது. உடனே மரத்தில் இருந்து பழங்களைப் பறித்து
தன் கைகளில் வைத்துக்கொண்டது.
குரங்கு
தன் கைகளில் வைத்திருந்த பழங்களை, தன் வயிற்றுக்கு அருகில் தனது மடியில்
வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அப்போது அந்த குரங்கிற்கு மற்றொரு எண்ணம் வந்தது.
பழங்கள் வயிற்றின் அருகில் தான் இருக்கின்றன. பழங்கள் வயிற்றின் வெளியே இருந்தால்
என்ன? உள்ளே இருந்தால் என்ன? இரண்டிற்கும் இரண்டு அங்குல இடைவெளிதானே இருக்கிறது
என்று நினைத்தவாறே பழங்களை உண்டது. விரதமும் முடிந்து போனது.
நீதி
:
ஒரு
செயலைச் செய்ய தீர்மானித்து விட்டு, அச்செயலை எண்ணி மனதில் வீண் சந்தேகங்கள்
முளைத்துக் கொண்டிருந்தால் அச்செயலை செய்து முடிக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக