செவ்வாய், 21 ஏப்ரல், 2020

உலகை வெல்லும் சக்தி யாருக்கு?... படிங்க... சிந்தியுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்கலாம் வாங்க...!!

பாபு : மனைவியை அடக்கி ஆளுவது எப்படின்னு ஒரு புக் எழுதலாம்னு இருந்தேன்...
ராமு : அப்புறம் என்ன ஆச்சு?
பாபு : என் பொண்டாட்டி அடிச்ச அடியில மனைவியிடம் அடங்கி போவது எப்படின்னு எழுதிட்டேன்...
ராமு : 😂😂
----------------------------------------------------------------------
சீனு : மதுரைக்கு துரு பஸ் இருக்காப்பா?
தீபக் : துரு பஸ் இல்ல... பெயிண்ட் அடிச்ச பஸ்தான் இருக்கு...
சீனு : 😏😏
----------------------------------------------------------------------
கடைக்காரர் : என்னடா 50 ரூபாய்க்கு பொருள் வாங்கிட்டு 50 சாக்லெட் கொடுக்குற...?
ராஜா : சில்லறை இல்லன்னு ஒரு மாசமா நீ கொடுத்ததுதான்ட அது... உனக்கு வந்தா ரத்தம்... எனக்கு வந்தா அது தக்காளி சட்னியா?
கடைக்காரர் : 😳😳
----------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
👉 எதிரி எவ்வளவு பெரியவன்? என்பது முக்கியம் அல்ல. உன் துணிச்சலும், தன்னம்பிக்கையும் எவ்வளவு பெரியது? என்பதே முக்கியம்.

👉 என்ன நடந்தாலும் தன் குறிக்கோளில் மிக தெளிவாக இருப்பவனுக்குத்தான் இந்த உலகத்தை வெல்லும் சக்தி இருக்கிறது.

👉 அழுவதற்கு ஒரு ஆறுதலும் இல்லாமல் தனியாக அழுது முடித்த பின்பு வரும் தன்னம்பிக்கை மிக பெரியது.

👉 மற்றவர்கள் எது சொன்னாலும் உண்மை என்று உடனே நம்பிவிடாதே. அது உனக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் அதை ஆராய ஒரு போதும் மறந்துவிடாதே.
----------------------------------------------------------------------
விடுகதைகள்...!!

1. மண்ணுக்குள்ளே கிடப்பான். மங்களகரமானவன். அவன் யார்?

2. தொப்பி போட்ட காவல்காரன், உரசிவிட்டால் சாம்பல் ஆவான். அவன் யார்?

3. ஊர் சுற்ற கூட வருவான். ஆனால், வீட்டுக்குள்ளே வரமாட்டன். அவன் யார்?

4. தொட்டுவிட்டால் ஏதும் இல்லை. அரைத்துவிட்டால் சிவந்துவிடுவான். அவன் யார்?

விடைகள் :

🌟 மஞ்சள்.

🌟 தீக்குச்சி.

🌟 செருப்பு.

🌟 மருதாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்