👉நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று கண்ணாமூச்சி. நம்மில் கண்ணாமூச்சி விளையாடாதவர்கள் கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். இந்த விளையாட்டு நம் குழந்தைகள் விளையாடும்போது அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வு உருவாக முக்கிய காரணமாக அமைகிறது.
👉கண்ணாமூச்சி சிறுவர்களால் விளையாடப்படும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். சிலர் ஒளிந்து கொள்ள ஒருவர் தேடிச்சென்று அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இது சிறுவர், சிறுமியர் மட்டுமல்லாமல் பெரியவர்கள் கூட விளையாடுவார்கள்.
எத்தனை பேர் விளையாடலாம்?
👉இரண்டிற்கும் மேற்பட்டோர்.
எப்படி விளையாடுவது?
👉முதலில் யார் ஒளிந்து கொள்ள வேண்டும்? யார் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்? என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.
👉விளையாடுபவரின் கண்ணை மற்றொருவர் தன் இரண்டு கைகளால் பொத்திக்கொள்வார்கள்.
கண்ணாமூச்சி ரே.... ரே....
காதறுப்பான் ரே... ரே....
நல்ல முட்டையை திண்ணுப்புட்டு
கெட்ட முட்டையை கொண்டு வா...!!
அல்லது
கண்ணா... கண்ணா... மூச்சி
காட்டு தல மூச்சி....
நல்ல முட்டைய திண்ணுட்டு...
ஊல முட்டைய கொண்டுவா....
👉என பாடிக்கொண்டே மூடியிருக்கும் கண்ணை திறந்து விடுவார்கள். அதற்குள் மற்றவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
👉ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் கண்ணைப் பொத்தியவரை ஓடி வந்து தொட்டுவிட வேண்டும். தேடுபவரிடம் அகப்படாமல் கண்ணைப் பொத்தியவரை தொட்டுவிட்டால் பழமாவார்கள். அப்படியில்லையென்றால் கண்ணை பொத்தியிருந்தவர் ஒளிந்து இருந்தவரை தொட்டுவிட்டால் அவர்கள் அவுட். இதில் யார் அவுட் ஆகிறார்களோ அவர்கள் கண்ணை பொத்திக்கொண்டு இவ்விளையாட்டை தொடர வேண்டும்.
👉தற்போது உள்ள கால சூழ்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை காண்பது அரிதாகி கொண்டு வருகிறது.
பயன்கள் :
👉தேடிக் கண்டறியும் திறன் மேம்படும்.
👉செவிப்புலன் கூர்மையாகிறது.
👉காட்டிக் கொடுக்கக்கூடாது என்னும் பண்பு வளர்கிறது.
👉தளர்நடைப் பருவத்தில் குழந்தைகளை தாய்மார் கண்ணாமூச்சி விளையாடச் செய்து நடை பழக்குவர்.
👉நல்ல உடற்பயிற்சியும், மனத்தெளிவும் பிறக்கும்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக