மூலவர் : பொன்னுருவி கண்ணகி
உற்சவர் : -
அம்மன்/தாயார் :பொன்னுருவி கண்ணகி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : அம்மையநாயக்கனூர்
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருவிழா:
தினமும் உச்சிகால பூஜை, மாத பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. சித்திரை தமிழ் மாத பூஜை சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. இதில் அம்மையநாயக்கனூர், பொன்னுருவி, சிறுமலையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பொன்னுருவி கண்ணகி அருள் பெற்று செல்கின்றனர்.
தல சிறப்பு:
மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது என்பதற்கு ஏற்ப பொன்னுருவி கண்ணகி கேட்ட வரம் தரும் அற்புத அன்னையாக விளங்குகிறாள்.
திறக்கும் நேரம்:
போனில் தொடர்பு கொண்டு விட்டு சென்றால் பூசாரி வந்து அர்ச்சனை செய்து கொடுப்பார்.
முகவரி:
அருள்மிகு பொன்னுருவி கண்ணகி திருக்கோயில், அம்மையநாயக்கனூர், திண்டுக்கல்.
போன்:
+91 81109 59270
பொது தகவல்:
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் ஜமீன் வம்சாவளியினர் கூறுகையில், இக்கோயிலின் ஐந்தாம் தலைக்கட்டு பரம்பரை பூஜாரியாக உள்ளனர். கோவலன், கண்ணகி வணங்கிய பொன்னுருவி அம்மன் பிற்காலத்தில் பொன்னுருவி கண்ணகி கோவில் என மறுவியது. மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது என்பதற்கு ஏற்ப பொன்னுருவி கண்ணகி கேட்ட வரம் தரும் அற்புத அன்னையாக விளங்குகிறாள்.
பிரார்த்தனை
கேட்டவரம் தரும் அன்னையாக விளங்குவதால் இங்கு அனைத்துவிதமான பிரச்சனைகளுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
-
தலபெருமை:
-
தல வரலாறு:
காவிரிப்பூம்பட்டினத்து பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். கலையுணர்வு, வறியோர்க்கு உதவும் நற்பண்பு மிக்கவராக திகழ்ந்தான். காவிரிப்பூம்பட்டினத்து பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி. திருமகள் போன்ற அழகும், பெண் குலம் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புக்கரசியாகவும் திகழ்ந்தாள். இவ்விருவரும் மனையறம் பூண்டு இன்புற்று வாழ்ந்தனர். ஆடலரசி மாதவியின் ஆடலில் கோவலன் மயங்கி கண்ணகியை பிரிந்தான். மாதவி இல்லத்திலேயே தங்கி தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். இந்திர விழாவில் கானல் வரிப்பாடல்களை மாதவி பாடினாள். இதன் பொருளை தவறாக புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டு பிரிந்தான். கோவலன், கண்ணகியை சென்றடைந்தான்.
இழந்த செல்வங்களை ஈட்ட வணிகம் செய்வதற்காக கண்ணகியுடன் மதுரைக்கு சென்றான். வழித்துணையாக கவுந்தியடிகள் எனும் சமணத்துறவி சென்றார். மதுரை நகர்ப்புறத்தில் மாதரி எனும் இடைக்குல மூதாட்டியிடம், அவ்விருவரையும் அடைக்கப்படுத்தினார் கவுந்தியடிகள். வணிகம் செய்ய கண்ணகியின் சிலம்பு விற்று வர, மதுரை நகர கடை வீதிக்கு சென்றான் கோவலன். காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதை பாண்டிய மன்னின் பொற்கொள்ளன் அறிந்து பாண்டிமாதேவியின் காற்சிலம்பை களவாடி கோவலன் விற்பதாக தவறான தகவல் கூறினான். ஆராய்ந்து அறியாத மன்னன், கோவலனை கொன்று சிலம்பை கொண்டு வரும்படி ஆணையிட்டான். இதன்படியே நடந்தது.
கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி, கண்ணகிக்கு தெரியப்படுத்தினார். நீதி தவறிய பாண்டிய மன்னனிடம், நியாயம் கேட்க கற்புக்கரசி கண்ணகி புறப்பட்டு சென்றார். தனது கணவர் கோவலன் கொண்டு வந்த காற்சிலம்பு மாணிக்கக் கற்கள் கொண்டது. மன்னனின் காற்சிலம்பு முத்துக்கள் கொண்டது என வாதாடி தனது காற்சிலம்பை உடைத்து காட்டி மாணிக்ககற்கள் இருப்பதை சபையில் நிரூபித்தாள் கண்ணகி. நீதி தவறிய பாண்டிய மன்னன் மாண்டான் என புராண வரலாறு கூறுகிறது. கோவலனும், கண்ணகியும் மதுரை வருவதற்கு முன் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொன்னுருவி வனத்தில் குடிகொண்டுள்ள பொன்னுருவி அம்மனை வணங்கியதாக ஐதீகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக