Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

தலைசிறந்த செயல்கள் எவை தெரியுமா?... சிறந்த வரிகள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
--------------------------------------------------
மாதவி : சாதம் சாப்பிட்டால் வெயிட் போடுவோமா டாக்டர்?
டாக்டர் : இல்லையே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...
மாதவி : நீங்க என்ன சொல்றீங்க..?😧😧
டாக்டர் : நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்...
மாதவி : 😠😠
--------------------------------------------------
சிரிக்க மட்டுமே...!!
--------------------------------------------------
ஒருவர் காபி ஷாப்பை விட்டு வெளியே வரும்போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலத்தை பார்த்தார். ஒரு சவப்பெட்டியை முதலில் எடுத்து செல்கிறார்கள். அதைத் தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது.

அதற்கு பின்னால் ஒருவர் ஒரு கருப்பு நாயை பிடித்து செல்கிறார். அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக கிட்டத்தட்ட 200 ஆண்கள் நடந்து செல்கிறார்கள். இதைபார்த்த அந்த மனிதருக்கு ஒரே ஆர்வம் அடக்க முடியவில்லை.

அவர் கருப்பு நாயுடன் நடந்து கொண்டிருந்தவரிடம் சென்று, என்னை மன்னிக்கவும். உங்களை தொந்தரவு செய்வதற்கு... ஆனால், இந்த மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.

எல்லோரும் ஒரே வரிசையில் உங்கள் பின்னால் வருகிறார்கள். இது யாருடைய இறுதி ஊர்வலம் என கேட்டார். அதற்கு அவர் முதல் சவப்பெட்டி என் மனைவியுடையது. உங்கள் மனைவிக்கு என்ன ஆனது? என்னுடைய நாய் அவளை கடித்து கொன்றுவிட்டது. இரண்டாவது சவப்பெட்டி யாருடையது? இது என்னுடைய மாமியாருடையது.

அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவர்களையும் நாய் கடித்து கொன்றுவிட்டது. ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு அவரிடம் கேட்டார்...

இந்த நாயை சிறிது நாட்கள் எனக்கு தர முடியுமா? என்று. அதற்கு அவர் பின்னால் வரும் வரிசையில் சென்று நில்லுங்கள் என்று பதில் சொன்னார்.😂😂

--------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
--------------------------------------------------
🌟 யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ... அவன் மிக தாழ்ந்தவன்...
யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ... அவன் மிக உயர்ந்தவன்.

🌟 துருப்பிடித்து அழிவதை விட தேய்ந்து அழிவது சிறந்தது.

🌟 தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுவது இல்லை.
--------------------------------------------------
தலைசிறந்த செயல்கள் எவை தெரியுமா?
--------------------------------------------------
👉 ஒரு மனித பிறவியின் மனதில் மகிழ்ச்சி ஊட்டுவது...

👉 நலிந்தோருக்கு உதவுவது...

👉 வேதனைப்படுவோரின் வேதனையை தணிப்பது...

👉 புண்பட்டோருக்கு செய்யப்பட்ட அநீதிகளை களைவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக