Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

முகம் சுருக்கமா இருக்கா, ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்யுங்க, சுருக்கம் காணாம போகும்!



சரும பராமரிப்பில் மிக முக்கியமானது ஃபேஷியல் செய்து கொள்வது.


ஃபேஷியலில் பல வகைகள் உண்டு. பயன்படுத்தும் பொருள்கள் வேறு வேறாக இருந்தாலும் எல்லாமே சரும அழகை பாதுகாக்கவும், சருமத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவாக வைக்கவும் கூடுதலாக ரிலாக்ஸ் கொடுக்கவும் உதவுகிறது.

ஃபேஷியல் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி முகத்தில் பொலிவு அதிகரிக்க தொடங்கும். இந்த பொலிவை சீராக பெற விரும்புபவர்கள் குறிப்பாக இளவயது பெண்கள் ஃபேஷியல் செய்து கொள்வதாக இருந்தால் அவர்கள் ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் அவர்களது அழகை நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும். இந்த ஃபேஷியலால் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். 

தெளிவான சருமம்

முகம் தெளிவாக மாசு மருவில்லாமல் இருந்தாலே அழகான முகம் சாத்தியம். இதை தடுக்கும் வகையில் முகத்தில் இறந்த செல்கள் அங்கேயே தேங்கி விடும். இதனால் முகத்தில் அழுக்குகள் தங்கி முகத்தின் பொலிவை கெடுக்க செய்யும்.
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க பலவிதமான பராமரிப்புகள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். எனினும் ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்யும் போது அவை சருமத்தின் மூன்று அடுக்குகளிலும் இருக்கும் அழுக்கை மொத்தமாக வெளியேற்றுகிறது.
அதோடு அங்கு தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடுவதால் முகம் மாசு மருவில்லாமல் தெளிவாக அழகாக இருக்கும்.
முகச்சுருக்கங்கள் போக்கும்
இளவயதில் முகச்சுருக்கங்கள் அதிகமாகிவருகிறது. நடுத்தர வயதுக்கு பிறகு சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவது இயல்பு. சிலருக்கு நெற்றீயில் வரி வரியாக சுருக்கங்கள், கோடுகள் ஆரம்பிக்கும். முகச்சுருக்கங்கள் ஏற்படபோவதற்கான அறிகுறி இது.
இன்று இளவயதிலேயே ஆண்களும், பெண்களும் கூட இந்த பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். இந்த முகச்சுருக்கங்கள் நீங்க முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்யும் போது முகத்தில் ரத்த ஓட்டமானது அதிகரித்து சுருக்கங்களை விழாமல் காக்கிறது. இயன்ற அளவு சுருக்கங்கள் தள்ளி போட இந்த ஃபேஷியல் உதவும்.
எண்ணெய் சீபம் கட்டுப்படுத்துதல்
முகத்தில் சுரக்கும் எண்ணெய் சீபமானது சரியான அளவு இருக்கும் வரை முகத்தில் பிரச்சனை இருக்காது. இவை அதிகரிக்கும் போது எண்ணெய்ப்பசை அதிகரிக்கும். முகத்தில் முகப்பருக்களை உண்டாக்கும்.
எண்ணெய் பசை அதிகரிக்கும் போது பருக்கள் அதிகரிப்பதோடு இவை மாறாத தழும்புகளையும் உண்டாக்கும். இந்த எண்ணெய் சீபம் சுரப்பு சருமத்துக்கு தேவையான அளவு இருந்தாலே முகப்பருக்கள் வராமல் கட்டுப்படுத்தப்படும்.
சருமத்தை இறுக்க செய்யும்
சரும சுருக்கங்கள் போன்று இவையும் சருமத்துக்கு வயதான தோற்றம் போல் நெகிழ்வை உண்டாக்கும். பேச்சு வழக்கில் தாடை கீழ் தொங்கியிருக்கு என்று சொல்வார்கள். பெரும்பாலும் முகத்தின் தளர்வு தாடை தொங்குதலில் கண்டறிய முடியும்.
சருமத்தில் கொலாஜன் உற்பத்தி இருக்கும் வரை சருமத்தில் நெகிழ்வு தன்மை உண்டாகாது . பலரும் வயதான காலங்களிலும் சருமத்தில் நெகிழ்வு இல்லாமல் இறுக்கமான சருமத்தைக் கொண்டிருக்க காரணம் இந்த கொலாஜன் உற்பத்தி சுரப்பு சீராக இருப்பதால் தான்.
இந்த ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்யும் போது கொலாஜன் உற்பத்தி சீராக்குகிறது. இதனால் சருமம் இறுக்கமாக வைக்க உதவுகிறது. என்றூம் இளமை தோற்றமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த ஃபேஷியல் நல்லதீர்வாக இருக்கும்.
பிரகாசமான சருமம்
மாசு மருவில்லாத சருமம் எப்படி முக்கியமோ அது போலவே பிரகாசமான சருமமும் முக்கியம். ஃபேஷியல் செய்தாலே முகத்தில் பிரகாசம் கூடும். அதிலும் இந்த ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்து கொண்டால் அடுத்த ஃபேஷியல் செய்து கொள்ளும் வரையிலும் முகத்தில் பிரகாசத்தை பார்க்கமுடியும்.
எப்போதும் சருமம் பிரகாசமாக இருக்கும். வெயிலில் செல்லும் போதும் கூட சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமம் கருமையடையாமல் பாதுகாக்கும்.
ஆக்ஸிஜன் ஃபேஷியலில் இருக்கும் 02 என்பது சருமத்துக்கு உயிர்ப்பு தருகிறது. அதாவது ஆக்ஸிஜன் தந்து சுவாசம் பெற உதவுகிறது. இதில் C2 என்பது பப்பாளி அன்னாசி பழங்களின் நொதியிலிருந்து தயாரிக்கப்பட்ட பேஸ்ட். இவை முகத்துக்கு தேவையான ஹைட்ரஜன் பெராக்ஸைடை ஊக்குவித்து சருமத்தின் பொலிவை பாதுகாக்க உதவுகிறது.
மென்மயான சருமத்தை கொண்டிருப்பவர்களும் முகப்பருக்கள் அதிகம் கொண்டிருப்பவர்களும் இந்த ஃபேஷியல் தவிர்க்க வேண்டும். இது குறித்து உங்கள் அழகு கலை நிபுணரோடு ஆலோசிக்கவும் தயங்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக