வீட்டில் எலித்தொல்லை அதிகமானால் ஒரு சாமான்களையும் விடாது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் முதல் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் வயர்கள் வரை கொரித்து தின்று விடும். நாமும் எவ்வளவோ மருந்து பொறியெல்லாம் வைத்தும் என்னவோ எலி பிடிபட்ட படாக இருக்காது. எனவே வீட்டில் இருக்கும் எலிகளை விரட்ட இயற்கையான இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். எலி உங்க வீட்டுபக்கம் கூட வராது.
குளிர்காலம் வந்து விட்டாலே வீட்டில் எலித்தொல்லை தாங்க
முடியாது. அது போடும் கீச் கீச் சத்தமும் அது பண்ற அட்டகாசமும் நம்மள ஒரு வலி
பண்ணிவிடும். நீங்க நினைக்கலாம் தம்மா துண்டு எலிதான ஈஸியாக பிடிச்சிடலாம்னு ஆனா
எலிகளை விரட்டுவது அவ்வளவு சுலபமானது கிடையாது. நீங்க அத அப்படியே விட்டால் நிறைய
குட்டிகள் போட்டு குடும்பம் நடத்த ஆரம்பித்து விடும். எலிகள் நம் வீட்டில் உள்ள
உணவுப் பொருட்கள், புத்தகங்கள், வீட்டுப் பொருட்கள், வயர்கள் போன்றவற்றை கொரித்து
ஒன்றுக்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கி விடும். சில நேரங்களில் அது நம்மை கடிக்க கூட
வாய்ப்பு உள்ளது.
எலித்தொல்லை
எலி கடிப்பதால் ஏராளமான நோய்கள் பரவ
வாய்ப்பு உள்ளன. அதன் மலம், சிறுநீர் மற்றும் எச்சங்கள் வழியாகக் கூட மனிதருக்கு
உயிரைக் கொல்லுகின்ற அளவிற்கு நிறைய நோய்கள் பரவுகிறது. இதை மருந்து வைத்து
பிடித்து விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சின்ன பிள்ளைகள் இருக்கும்
வீட்டில் மருந்து வைப்பது மருந்து அடிப்பது என்பது கஷ்டமான செயல் ஆகும். எனவே அந்த
மாதிரியான சமயங்களில் எலிகளை விரட்ட இந்த சிம்பிள் வீட்டு முறைகளை கையில்
எடுக்கலாம். ஏனெனில் சில பொருட்கள் எலிகளுக்கு அழற்சியை உண்டாக்குகிறது. உதாரணமாக
புதினா எண்ணெய்யின் வாசம் என்றாலே எலிகளுக்கு அழற்சியால். எனவே உங்க வீட்டில்
புதினா எண்ணெய்யை வைப்பதன் மூலம் எலிகளை விரட்டலாம்.
இதே மாதிரி இன்னும் ஏராளமான நன்மை
தரும் பொருட்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி எலிகளை எப்படி விரட்டலாம். வாங்க
அறிந்து கொள்வோம்.
புதினா எண்ணெய்
புதினா எண்ணெய் வாசனை எலிகளுக்கு
பிடிக்காது. எனவே காட்டன் பஞ்சு உருண்டையை எடுத்து அதை புதினா எண்ணெய்யில் நனைத்து
உங்க வீட்டின் நுழைவாயில் மற்றும் மூலை முடுக்குகளில் வைக்கலாம். ஏனெனில் மூலை
முடுக்குகள் எலிகள் தங்க வசதியான இடமமாக இருக்கும். எனவே அந்த இடங்களில் வைக்கும்
போது எலிகள் ஓடி விடும். சில நாட்கள் கழித்து அதை மறுபடியும் புதுப்பித்து
வைக்கவும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு துண்டுக்கும்
எலிகளுக்கும் ஆகவே ஆகாது. எனவே மூளை முடுக்குகளில் உடனடியாக உருளைக்கிழங்கு துண்டை
வெட்டி போட்டு வைக்கவும். இது தெரியாமல் உருளைக்கிழங்கை சாப்பிட எலிகள்
முயற்சிக்கும். ஆனால் உருளைக்கிழங்கை சாப்பிட்ட உடன் எலிகளின் வயிறு வீங்கி
இறுதியில் அவை இறக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் எலிகளை விரட்டிடலாம்.
வெங்காயம்
வெங்காய வாசனை நம்மளுக்கு மட்டுமல்ல
எலிகளுக்கு கூட பிடிக்காதாம். வெங்காயம் அழுகுவதால் எலிகள் அந்த வாசனைக்கு வராது
ஓடியே போய்விடும். எனவே எலிகள் இருக்கும் இடத்தில் வெங்காயத்தை வையுங்கள். இரண்டு
நாட்களுக்கு ஒரு முறை புதிய வெங்காயத்தை மாற்றுங்கள்.
கோக்கோ பவுடர்
உலர்ந்த பிளாஸ்டர் பாரீஸ் மற்றும்
கோக்கோ பவுடர் அல்லது சாக்லேட் பவுடர் சேர்த்து எலிகள் நடமாடக் கூடிய இடங்களில்
தூவி விடுங்கள். இதை சாப்பிட்ட எலிகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தண்ணீர்
குடிக்க ஓடிவிடும். அப்படி குடிக்கவில்லை என்றால் உடனே இறக்க வாய்ப்பு உள்ளது.
மிளகுப்பொடி
இது எலிகளை விரட்ட செலவில்லாத
முறையாகும். மிளகும் பொடியை எலிகள் வருகின்ற இடங்களில் தூவி விடுங்கள். அதன் நெடிய
காரமான வாசனை எலிகளை வீட்டில் இருந்து ஓட விரட்டுகிறது.
பூண்டு பற்கள்
பூண்டை தண்ணீரில் கலந்து எலிகளுக்கான
மருந்தை நீங்கள் வீட்டிலேயே ரெடி பண்ணலாம். இல்லையென்றால் பூண்டு பற்களை வீட்டின்
நுழைவாயிலில் மற்றும் மூலை முடுக்குகளில் போட்டு வையுங்கள்.
கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய்
கிராம்பு வாசனையும் எலிகளுக்கு
பிடிக்காத ஒன்று. எனவே எலிப் பொந்துக்கு அருகில் ஒரு மஸ்லின் துணியில் கிராம்பை
நிறையா வைத்து வைத்து விடுங்கள். எலிகள் வராது. கிராம்பை பொடி செய்தும் வைக்கலாம்.
அல்லது கிராம்பு எண்ணெயை நல்ல காட்டன் பாலில் நன்றாக நனைத்து எலி வரும் இடங்களில்
வைத்து விடுங்கள். எலி அந்த வாசனைக்கு வீட்டுக்குள்ளேயே வராது.
அம்மோனியா
எலிகளுக்கு எப்பொழுதும் வலுவான வாசனைகள்
பிடிக்காது. ஒரு சிறிய பெளலில் அம்மோனியா பொடியை கலந்து எலிகளுக்கு பிடித்தமான
இடங்களில் வைத்து விடுங்கள். எலிகள் ஓடியே விடும்.
எலிகள் வராமல் தடுக்க
முதலில் வீட்டில் எதாவது உணவுப் பொருட்கள் சிதறி கிடப்பதால் வீடு தூய்மையாக இல்லாவிட்டால் உணவுகளை சாப்பிட எலிகள் வர வாய்ப்புள்ளது. எனவே வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். எலிகளை விரட்ட நீங்கள் வீட்டில் பூனைகளைக் கூட வளர்த்து வரலாம்.
எலிகள் நம் வீட்டில் இருக்கும் சிறிய
துளைகள், குழாய் ஓட்டை வழியாக வர வாய்ப்புள்ளது. எனவே அதற்கு சல்லடை போன்று
அடைத்து வைப்பது நல்லது. மூலை முடுக்குகளில் பொருட்களை போட்டு குவித்து
வைக்காதீர்கள். ஏனெனில் எலிகள் அங்கு சென்று ஒழிந்து கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக