>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 14 ஏப்ரல், 2020

    ஹா... ஹா... நேயர் விருப்பம்... இது எப்படி இருக்கு...? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    இது சிரிப்பதற்கான நேரம்...!!

    நீதிபதி : நீ 15-வது தடவையா நீதிமன்றத்துக்கு வந்திருக்க.. உனக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன்.
    குற்றவாளி : ரெகுலர் கஸ்டமருக்கு தள்ளுபடி இல்லையா எசமான்?
    நீதிபதி : 😳😳
    --------------------------------------------------------------------
    அருண் : நீங்க தை மாதம்தான் செருப்பு மாத்துவீங்களாமா? ஏன்?
    குமார் : அப்பதானே நிறைய கல்யாணம் நடக்கும்.
    அருண் : 😬😬
    --------------------------------------------------------------------
    அமலா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!
    விமலா : எதை வெச்சு?
    அமலா : பேனாவ வெச்சுதான்...
    விமலா : 😑😑
    --------------------------------------------------------------------
    பாபு : அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன சண்டை?
    ராமு : அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.
    பாபு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
    ராமு : 😩😩
    --------------------------------------------------------------------
    ஹா... ஹா... இது எப்படி இருக்கு...?

    வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..
    நேயர் : ஹலோ வணக்கம்!
    தொகுப்பாளர் : வணக்கம்! சொல்லுங்க...
    நேயர் : வணக்கம்தான் சொல்லிட்டனே.. எத்தனை தடவை சொல்றது?
    தொகுப்பாளர் : அது இல்லிங்க...
    நேயர் : எது இல்லை?
    தொகுப்பாளர் : சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?
    நேயர் : போன்ல இருந்துதான் பேசறேன்.
    தொகுப்பாளர் : சரி என்ன பாட்டு வேணும்?
    நேயர் : சினிமா பாட்டுதான்.
    தொகுப்பாளர் : சரி எந்த படத்துல இருந்து?
    நேயர் : சினிமா படத்துல இருந்துதான்.
    தொகுப்பாளர் : அய்யோ! என்று தலையில் அடித்துக்கொண்டு எனக்கு வேலையும் வேண்டாம்... எதுவும் வேண்டாம்.... ஆளவிடுங்க...
    --------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்.

    விளக்கம் :

    இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக