Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஆசை... பேராசை... வாழ்ந்தா... இப்படி வாழணும்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

பாபு : என் தலையில எறும்பு ஏறுது சார்...
ஆசிரியர் : அத ஏன்டா என்கிட்ட சொல்ற?...
பாபு : நீங்கதான சார் சொன்னீங்க... என் தலையில எதுவுமே ஏறாதுன்னு...
ஆசிரியர் : 😳😳
------------------------------------------------------------------------------------------------------
உனக்கு நீ மட்டுமே உறவு...!!
அன்பை கேட்டு வாங்காதீர்கள்...
அக்கறையை சொல்லி பெறாதீர்கள்...
காதலை பிச்சை எடுக்காதீர்கள்...
இவை எல்லாம் கிடைக்காத இடத்தில் இருக்காதீர்கள்...
திமிர் கொள்ளுங்கள்...
தனிமையில் நிறையுங்கள்...
திறமையை செதுக்குங்கள்...
தன்னம்பிக்கையை வளருங்கள்...
யார் இல்லாவிட்டாலும் பூமி சுற்றும்...
உன் விதி உள்ளவரை பயணம் கிட்டும்...
மரணம் வரை வருபவர்கள் யாரும் இல்லை...
இவ்வுலகில் உனக்கு நீ மட்டுமே உறவு...!!
------------------------------------------------------------------------------------------------------

ஆசை... பேராசை... சிரிக்க மட்டுமே...!!
ஆசை... பேராசை... இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறது ஆசை...

ஆனா கல்யாணத்துக்கு பிறகு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா அது பேராசை...!!
------------------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
உப்பு விக்க போன மழை பெய்யுது...
மாவு விக்க போனா காத்தடிக்குதுன்னு...
பொலம்புறத விட்டுட்டு...
ரெண்டையும் மிக்ஸ் பண்ணி
போண்டா சுட்டு விக்க கத்துக்கணும்...
எல்லா சீசன்லையும் வியாபாரம் பிச்சுக்கும்...!!
------------------------------------------------------------------------------------------------------
வாழ்ந்தா... இப்படி வாழணும்...!!
வாழ்ந்தா இட்லி மாதிரி வாழணும்...
குளிக்குள்ள தள்ளினாலும் கும்முன்னு வெளிய வரணும்...
உயிரை கொடுத்து செல்லும் இடம்...!!
'சுடுகாடு"தானேன்னு சீப்பா நினைக்காதீங்க...
அங்க போறதுக்காக அவனவன் உயிரையே கொடுக்கிறான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!