Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 ஆகஸ்ட், 2020

உதவ நினைத்த ஆடு... ஆனால் நடந்தது என்ன?... குட்டி கதை.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
------------------------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுங்க...
மாணவன் : சார்... பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும் சார்... நானே சொல்றேன் கேட்டுக்கோங்க...
ஆசிரியர் : 😏😏
------------------------------------------------
சீனு : என்ன இது? ஒரு காலில் பச்சைக்கலர் சாக்ஸஷும், இன்னொரு காலில் வெள்ளைக்கலர் சாக்ஸஷும் போட்டிருக்க?
பாபு : சொன்னா நீங்க ஆச்சரியப்படுவீங்க... எங்க வீட்டுல இதேமாதிரி இன்னொரு ஜோடியும் இருக்கு.
சீனு : 😂😂
------------------------------------------------
இன்றைய தத்துவங்கள்...!!
------------------------------------------------
⭐ தவறே செய்யாதவன் புதியதாக எந்த முயற்சியும் செய்யாதவன்...

⭐ எல்லா மாற்றமும் வளர்ச்சியல்ல... எல்லா அசைவும் முன் செல்வதல்ல...

------------------------------------------------
குட்டி கதை...
------------------------------------------------
ஒருநாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அந்த நரி யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் என காத்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த பக்கம் யாரும் வரவில்லை. அதனால் சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீருக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தது நரி.

மூன்று நாட்கள் கடந்து போனது. அன்றைக்கு அந்த பக்கமாக ஒரு ஆடு கத்திக்கொண்டே வந்தது. உடனே நரி உஷாரானது. அந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என நினைத்தது.

ஆடே இங்க வா... என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டதும், ஆடு எட்டி பார்த்தது. என்ன நரியாரே? தவறி விழுந்துவிட்டாயா? என்று ஆடு கேட்டது.

அதற்கு நரி, இல்லை.. இல்லை நான் விழவில்லை... நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ள வந்தேன். இந்த கிணற்று தண்ணீர் சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடித்து பார் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை.

உடனே கிணற்றுக்குள் குதித்தது. பின் தண்ணீரை குடித்து பார்த்து இந்த தண்ணீர் அப்படி ஒன்றும் சுவையாக இல்லையே... உன் பேச்சை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியே போறது? என்று கேட்டது ஆடு.

முதல்ல உன் மேல ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டுறேன். கையை பிடிச்சுக்கிட்டு நீயும் வெளியே வந்துரு என்றது நரி. நரி அவ்வாறு கூறியதும் ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது நரி ஏறி வெளியே சென்றது.

பின்னர் ஆடு சீக்கிரமாக கையை கொடு.. என்னை சீக்கிரமாக காப்பாத்து என்று கூறியது. உன்னை நான் எப்படி காப்பாத்துறது? எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து ஒரு செயலை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு நரி சென்று விட்டது. ஆடு தனது முட்டாள் தனத்தை எண்ணி மிகவும் வருந்தியது.

நீதி : எந்தவொரு செயலை செய்தாலும், யோசித்து விட்டு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக