>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 20 பிப்ரவரி, 2020

    கவிதை... கவிதை... இது கதையா? இல்ல கவிதையா?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!


    சிரிக்கலாம் வாங்க...!!

    அப்பா : ஏன்டா டிரம்ம உருட்டுற?
    மகன் : தம்பிக்கு விளையாட்டு காட்டுறேன்பா...
    அப்பா : தம்பி எங்கடா?
    மகன் : டிரம்முக்குள்ள இருக்கான்பா...
    அப்பா : 😳😳
    ---------------------------------------------------------------------------------------------------------
    நோயாளி : நீங்க எழுதி கொடுத்த மாத்திரை எங்கேயுமே இல்லையாமா டாக்டர்...
    டாக்டர் : வாடா வா... பேனா எழுதுதான்னு கிறுக்கி பாத்த பேப்பரை தூக்கிட்டு போனது நீ தானா?
    நோயாளி : 😂😂
    ---------------------------------------------------------------------------------------------------------
    கவிதை... கவிதை...!!

    அன்பே நீ தோசை...
    எனக்கு உன் மேல ஆசை...
    அன்பே நீ இட்லி...
    உன் அண்ணன்தான் ஜெட்லி...
    அன்பே நீ கெட்டி சட்னி...
    என்னை போடாதே பட்னி...
    அழகே நீ ஒரு ஊத்தாப்பம்...
    உன்னை பார்த்தால் வருது ஏப்பம்...
    அன்பே நீ பரோட்டா...
    பொண்ணு கேட்டு வரட்டா?
    அன்பே நீ ஆப்பம்...
    ஒண்ணா வாழ்ந்து பாப்போம்...
    அன்பே நீ பூரி...
    இத படிச்சுட்டு துப்பாத காரி...
    அன்பே நீ கையேந்தி பவன்...
    உனக்காக கையேந்துறான் இவன்...
    ---------------------------------------------------------------------------------------------------------
    தாஜ்மஹால் க(வி)தை...!!

    பிரம்மச்சாரியாக...

    ஒரு தாஜ்மஹாலை கட்டிட ஆசை... ஆனால்,
    எனக்கொரு மும்தாஜ் கிடைக்கவில்லை...
    என்ன செய்ய... என் விதி அப்படி...😟😟

    காதலனாக...

    என் மும்தாஜ் என்னை மணம் செய்துகொள்ள மறுக்கிறாள்...
    என்ன செய்ய... என் விதி அப்படி...😩😩

    கணவனாக...

    ஒரு தாஜ்மஹாலை கட்டிட ஆசை... ஆனால்,
    என் மும்தாஜ் இன்னும் சாகவில்லையே...
    என்ன செய்ய... என் விதி அப்படி...😭😭
    ---------------------------------------------------------------------------------------------------------

    விடுகதைகள்...!!
    1. அந்தரத்தில் தொங்கியபடி ஆடை நெய்கிறான்... இவன் யார்?

    2. வாயிலே மலரும் பூ, நோயை விரட்டும் பூ... இது என்ன பூ?

    3. விடாது மழை பெய்தாலும் அசைந்தே நடப்பான் எங்கள் கருப்பன், யாருக்கும் வழி விடாமல் செல்வான் எங்கள் கருப்பன். இவன் யார்?

    4. கடிக்கத் தெரியாதவனுக்கு பற்கள் அதிகம்... யார் இவன்?

    விடைகள் :

    1. சிலந்தி

    2. சிரிப்பு

    3. எருமை மாடு

    4. சீப்பு.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக