Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 டிசம்பர், 2019

பலரின் கண்ணோட்டம் இப்படி... உங்களின் கண்ணோட்டம்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க ரெடியா?
சீனு : பாபு சாகுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தாருன்னு தெரியுமா?
சோமு : எப்படி சார் இருந்தாரு?
சீனு : உயிரோடதான் இருந்தாரு..
சோமு : 😠😠
------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : ஏன்டா நாய்படம் வரைஞ்சிட்டு
அதோட வாய் மட்டும் வரையல?
மாணவன் : ஏனா... அது வாயில்லா பிராணி சார்.
ஆசிரியர் : 😩😩
------------------------------------------------------------------------------------------------------------

குமார் : ரயில் வரும்போது ஏன் கேட்ட மூடுறாங்க தெரியுமா?
தீனா : தெரியாதே...!
குமார் : அட.. இது கூட தெரியாம இருக்கியே மக்கு...
ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்..
தீனா : 😠😠
------------------------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு...?
ரன்னிங் ரேஸ்ல கால் என்னதான் வேகமாக ஓடினாலும்,
பரிசு என்னமோ கைக்குத்தான் கிடைக்கும்.

எலக்ட்ரிக் ஒயர் மேல 3 எறும்பு போச்சு...
அதுல இரண்டு எறும்பு ஷாக் அடிச்சு செத்துப்போச்சு...
ஒன்னு மட்டும் சாகல ஏன்?
ஏனா அது கட்டை எறும்பு.

நீண்ட நாள் உயிர் வாழ என்ன வழி?
வேறென்ன சாகாமல் இருப்பதுதான்..!!
------------------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பொருள் :

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து அவரை காத்தல் அரிதாகும்.

கொள்கை...!!
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டுப் போங்கள்...
ஆனால் உங்களால் ஒருவர் அழவோ, அழியவோ கூடாதென்ற
கொள்கையை மட்டும் கடைபிடித்து வாழுங்கள்...!
இனி கவலை வேண்டாம்...!
கடந்து போனதை நினைத்து கவலை பட வேண்டாம்.
கவலை வேண்டாம் என்பதற்காகத்தான் அது கடந்து போனது.
கண்ணோட்டம்...!!
வெள்ளைதான் அழகு என்று பலர்...
கருப்புதான் கலை என்று சிலர்...
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்று பலர்...
மனித ஒழுக்கமே வாழ்க்கை என்று சிலர்...
கோவிலுக்கு செல்பவனே பக்தன் என்று பலர்...
கோவிலிலேயே இருப்பவனை பித்தன் என்று சிலர்...
காதலிப்பதை செய் என்று பலர்...
செய்வதை காதலி என்று சிலர்...
மனிதனை மண்ணாய்கூட மதிக்காதவர் பலர்...
கல்லையும் கடவுள் என்று நினைப்பவர் சிலர்...
அவனவன் கண்ணோட்டத்தில் காலங்கள் கரைகிறது...
வாழ்வதற்காக வாழு... பிறர் வார்த்தைகளுக்கு இல்லாமல்...
------------------------------------------------------------------------------------------------------------

பொன்மொழிகள்...!
🌟 உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.

🌟 சுயமாக சிந்திக்கத் தெரியாத மனிதன் தனக்குத்தானே அடிமையாகிறான்.

🌟 நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப்பார். ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை.

🌟 என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறும் வல்லவனே மனிதர்களுள் உயர்ந்தவன்.

🌟 இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக