தலைமுடியை அழகாகவும், எண்ணெய் பசையின்றியும்
வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று. குறிப்பாக குளிர்காலங்களில் தலைமுடியை
அலசுவது என்பது ஒரு கடினமான விஷயமாகும். குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவதற்கு
மிகவும் சோம்பலாக இருக்கும். இதனால் தலைமுடி பிசுபிசுப்பாக மாறுகிறது.
தலைமுடியை அதிகம் பராமரித்தால்தான் அழகாக
அடர்த்தியாக இருக்கும். இல்லாவிட்டால் வேகமாக உதிர்ந்து, உடைந்து, பொலிவிழந்து
காணப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள்,
உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகள் மற்றும் தூசி அதிகமுள்ள இடங்களில் அலைவதால்
முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்கள் முடி ஆரோக்கியமற்று
இருப்பதற்கு காரணமாக அமைகிறது. குளிர்காலங்களில் ஏன் இப்படி மாறுகிறது? என்பதை
பற்றி பார்ப்போம்.
தலைமுடி பிசுபிசுப்பிற்கான காரணங்கள்
:
குளிர்காலங்களில் வளிமண்டலத்தில் அதிக அளவில்
ஈரப்பதம் இருப்பதால் தலைமுடி சற்று ஈரமாகவும், எண்ணெய் தன்மையுடனும் இருக்கிறது.
குளிர்காலங்களில் உச்சந்தலையில் ஏற்கனவே மிகவும்
அதிகமாக எண்ணெய் தன்மை இருக்கும். அடிக்கடி ஷாம்பு தேய்த்து தலையை அலசாமல்
இருந்தால், அதிகப்படியான எண்ணெய் தலைமுடியில் சேருகிறது. அதுமட்டுமின்றி அப்படி
எண்ணெய் பசையுடனான முடியுடன் அழுக்கு, தூசி போன்றவையும் சேரும்போது பிசுபிசுப்பாக
மாறுகிறது.
அதிக வறுத்த உணவை சாப்பிடுவதால் கூட முடியில்
எண்ணெய் தன்மை ஏற்படலாம்.
உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் உங்கள் தலைமுடி
எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கும். இதற்காக, உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி அல்லது
யோகா செய்த பிறகு உங்கள் தலைமுடியை அலச வேண்டும்.
தலைமுடி பிசுபிசுப்பை போக்குவதற்கான
வழிமுறைகள் :
உங்கள் தலைமுடியை அடிக்கடி தொடாதீர்கள்.
ஏனென்றால் உங்கள் விரல் நகங்களில் இருக்கும் கிருமிகள் தலையில் சேர்ந்து தலைமுடியை
பாதிக்கும்.
உங்களின் தலையணைகள் மற்றும் சீப்புகளை சுத்தமாக
வைத்திருங்கள் மற்றும் இறுக்கமாக முடியை கட்டுவதை தவிர்ப்பது நல்லது.
குளிர்காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
தலையணை உறையை மாற்ற வேண்டும்.
உங்களின் தலைமுடியை ஆரோக்கியமாகவும்,
பாதுகாப்பாகவும் வைத்திருக்கக்கூடிய ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் யுஇ டீஇ ஊஇ நு
ஆகியவற்றை கொண்டிருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள், வறுத்த
அல்லது பொரித்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இதை
செய்வதன் மூலம், இயற்கையான புரதம் உங்களின் தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும்,
நீளமாகவும் வைத்திருக்க உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக