மும்மூர்த்திகளில் ஒருவரும், அண்ட
சராசரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாகவும் விளங்கும் சிவபெருமானை இரவு முழுக்க
கண்விழித்து மனதார வழிபடும் மஹாசிவராத்திரி விழா இன்று உலகம் முழுவதும்
கொண்டாடப்படவிருக்கிறது. இந்திய ஆன்மிகத்தின் அடிநாதமாக விளங்கும் சிவபெருமானுக்கு
இத்திருநாட்டில் ஆயிரமாயிரம் கோவில்கள் உண்டு. இக்கோவில்களை காட்டிலும் மிகப்பெரிய
சிவலிங்கத்தை கொண்டிருக்கும் கோவிலானது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. அதோடு
அதிக அளவிலான சிவலிங்கங்கள் இருக்கும் கோவில் என்ற சிறப்பையும் பெற்றிருக்கும்
அபூர்வ கோவில் ஆகும்.
அமைவிடம்
:
கர்நாடக மாநிலத்தில் தங்க சுரங்கத்திற்கு
புகழ்பெற்ற கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற ஊரில் அமைந்திருக்கிறது
கோடிலிங்கேஸ்வரர் கோவில்.
தல
வரலாறு :
இந்த ஆலயத்தில் சாம்பசிவமூர்த்தி என்பவரால்
முதல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது. அதன் பின்னர்
இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு சிவலிங்கத்தை ஆங்காங்கே
பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கிவிட்டனர். இவ்வாறு பல்கிப் பெருகியதன் காரணமாக
இப்போது ஒரு கோடிக்கும் அதிகமான சிவலிங்கங்கள் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது.
இப்போதும் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இங்கு வந்து வழிபடும்
பக்தர்கள் அனைவரும் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துதான் இறைவனை வழிபட்டுச்
செல்கிறார்கள். இக்கோவிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட ஒரு கோடி சிவலிங்கங்கள்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோவிலுக்கு கோடிலிங்கேஸ்வரர் கோவில் என்ற
பெயர் வந்துள்ளது.
தல
சிறப்பு :
இங்கு 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய
சிவலிங்கம் இருக்கிறது.
கோடிலிங்கேஸ்வரர் கோவிலில் 108அடி உயரமுடைய
சிவலிங்கமும் அதற்கு நேர் எதிராக 35அடி உயரம் கொண்ட நந்தியும் இருக்கிறது.
மேலும் இக்கோவில் வளாகத்தினுள் பிரம்மா, விஷ்ணு,
மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, ராமர், லக்ஷ்மணர்,
சீதை, ஆஞ்சநேயர், கன்னிகாபரமேஸ்வரி, கருமாரியம்மன் ஆகிய கடவுளர் சந்நிதிகள் உள்ளன.
கோடிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தினுள் இருக்கும்
கன்னிகாபரமேஸ்வரி சந்நிதியினுள் 'சிவ பஞ்சயாதி" என்னும் சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தை சுற்றிலும் விநாயகர், முருகர், பார்வதி மற்றும்
நந்தி ஆகியவர்கள் நின்று வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும், நாள்
தவறாமல் பூஜைகள் நடைபெறுவது சிறப்புக்குரிய விஷயமாகும்.
பிராத்தனை
:
கோடிலிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டு
நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி
மணமானவர்கள் மணவாழ்க்கை இடையூறு இன்றி இன்பமாக அமைய வேண்டியும் சிவபெருமானை
வேண்டிக்கொண்டு, இந்த நாகலிங்க மரங்களில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு
செய்கிறார்கள்.
இந்தக் கோவிலில் வித்தியாசமான
வழிபாட்டு முறை ஒன்றை வழக்கத்தில் இருக்கிறது. அது சிவலிங்க பிரதிஷ்டை வழிபாடு
ஆகும். தங்கள் வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள், தங்களால் முடிந்த அளவில்
வௌ;வேறு அளவுகளில் சிவலிங்கத்தை செய்து கொண்டு வந்து, இந்தக் கோவில் வளாகத்தில்
பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கங்கள்,
அந்தந்த பக்தர்களின் பெயரிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக