இது சிரிப்பதற்கான நேரம்...!!
கடைக்காரன் : கடையில் 2000 ரூபாய்க்கு எது வாங்கினாலும் 1 கடிகாரம் இலவசம்.
பாபு : எது வாங்கினாலும் கடிகாரம் இலவசமா?
கடைக்காரன் : ஆமாம்...
பாபு : அப்ப 2000 ரூபாய்க்கு சில்லறை கொடு. அப்படியே அந்த கடிகாரத்தையும் கொடு.
கடைக்காரன் : 😩😩
------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
நூறு சதவீத உழைப்பை கொடுத்த போராட்டத்தின் இறுதியில் கிடைக்கும் வெற்றியும், பொருளும் எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்பதற்கு முதல் உதாரணம்...
கோவில் வரிசையில் நின்று கிடைத்த பொங்கல்...😝😝
------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
சில நாய்களுக்கும், ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது? என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
வானத்தை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன.
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவில்லை.
போட்டியை பார்க்க கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். 'என்ன நடந்தது?" 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?" என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர் சொன்ன விடை,
சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்.
சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.
ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்படி செய்வதால் நமக்குத்தான் காலம், பொருள், ஆற்றல் விரயம் ஏற்படும்.
தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம் நாம் யார்? என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்...
------------------------------------------------------------------------------------------
அட அப்படியா?...
அந்த காலத்திலேயே ஒரு தீர்க்கத்தரிசனத்தோடு Internet Revolution பத்தி ஒரு பாட்டு எழுதியிருக்காங்க...
தேடினேன் வந்தது – Google Search
நாடினேன் தந்தது – Amazon / Flipkart
வாசலில் நின்றது – Ola / Uber / Swiggy / Zomato
வாழ வா என்றது – Matrimony.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக