சிரிக்கலாம் வாங்க...!!
பாபு : அவ்வளவு பெரிய வண்டியில அடிபட்டும் எப்படிங்க கத்தாம அமைதியா இருந்தீங்க?
ராமு : அது நடமாடும் நூலக வண்டிங்க. கத்தினா அபராதம் விதிப்பாங்களேன்னு பயந்துட்டேன்.
பாபு : 😬😬
-----------------------------------------------------------------
குமார் : மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினாரு-ன்னு யாரோ போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்க..
ராம் : அப்புறம் என்ன ஆச்சு?
குமார் : வரதட்சணை வாங்குற பழக்கம் தனக்கில்லைன்னு.. தன்னோட 3 மனைவியையும் கொண்டு வந்து சாட்சியா காட்டினாராம்.
ராம் : 😜😜
-----------------------------------------------------------------
சீனு : என்னங்க இது...? உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுக்கிட்டு, புத்தகத்தை படிச்சுக்கிட்டே அதை சுத்தி சுத்தி வரான்?
சோமு : அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டு இருக்கான்...
சீனு : 😂😂
-----------------------------------------------------------------
தீபக் : நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்னாடி எல்லோருக்கிட்டையும் பேசி சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறாரு?
குணா : 10 நிமிஷத்துக்கு முன்னாடி அவர் மனைவியோடு போன்ல பேசினாரு. அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டாரு.
தீபக் : 😆😆
-----------------------------------------------------------------
பொன்மொழி...!!
⭐ அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்ப செய்கிறவன் மூடன்.
⭐ மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை, அந்த மூச்சு இருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன்.
⭐ மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது தெரியுமா? அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான்.
-----------------------------------------------------------------
கோடீஸ்வரன் செயல்...!
கோடீஸ்வரன் செயல்...!
நான் கோடீஸ்வரனாக ஆனால் என்ற தலைப்பில் மாணவர்களை கட்டுரை எழுத சொன்னார் ஆசிரியர்.
ஒரே ஒரு மாணவனை தவிர எல்லோரும் கட்டுரை எழுதி தந்தனர்.
ஒன்றும் எழுதாமல் சும்மா இருந்த அந்த மாணவனை பார்த்து, நீ ஏன் எதுவும் எழுதவில்லை? என்று கேட்டார் ஆசிரியர்.
நான் கோடீஸ்வரனாக ஆனால் எதுவும் செய்ய மாட்டேன் சார் என்று பதில் தந்தான் அவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக