வியாழன், 28 நவம்பர், 2019

கடவுளால் கூட புரிந்துக்கொள்ள முடியாத ஒன்று... என்னவாக இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

கொஞ்சம் சிரிக்கலாமே..!

கயல் : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலிருக்கே.
ராமு : எத வெச்சு சொல்ற?
கயல் : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்குறாரு.
ராமு : 😂😂
-------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------------

பாபு : அந்த ஆள் மாடு மாதிரி ஹோட்டல்ல உழைச்சாரு... ஆனா வேலையை விட்டு தூக்கிட்டாங்க...
குமார் : ஏன்?
பாபு : அவரு எப்ப பாத்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரு!
குமார் : 😝😝
-------------------------------------------------------------------------------------------------------------

பொன்மொழிகள்..!
👉 நல்ல பெயரெடுத்தல் என்பது பணத்தைவிட மகத்தானது.

👉 குறைவாக சபதமிடுங்கள், நிறைவாகச் சாதியுங்கள்.

👉 எழ முடியாத நேரத்தில் எழுந்து நிற்பவனே சாதனையாளன்.
-------------------------------------------------------------------------------------------------------------

விடுகதைகள்..!
கேள்வி :

1. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்க முடியாத நீர். அது என்ன?

2. கூடவே வருவான். ஆனாலும் ஒரு உதவியும் செய்ய மாட்டான். அவன் யார்?

3. சின்னப்பெட்டிக்குள் கீதங்கள் ஆயிரம், ஆயிரம். அது என்ன?

பதில்கள் :

1. கண்ணீர்.

2. நிழல்.

3. ஆர்மோனியப் பெட்டி.
-------------------------------------------------------------------------------------------------------------

இது எப்படி இருக்கு?... சிரிக்க மட்டுமே...!!
ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம் ஏற்பட்டது. தற்கொலை செய்யாமல் அப்படியே அமர்ந்து விட்டாள். ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முனுமுனுத்தது.

இதை கண்ட சிவன், பிரம்மா, விஷ்ணு மூவருக்கும் ஒரே குழப்பம். அவள் யாரை நினைத்து தவம் செய்கிறாள் என குழப்பத்தை தீர்த்துக்கொள்ள பூலோகம் வருகிறார்கள். அவள் உதடு அசைவதை வைத்து தன்னைதான் நினைத்து தவம் செய்கிறாள் என மூன்று கடவுளும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.

இவர்களின் தீராத சண்டையை கண்டு நாரதர், அவர்கள் முன் தோன்றி ஒரு யோசனை சொல்கிறார். நான் போய் அவளை தள்ளிவிடுகிறேன். யார் பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ, அவர்கள் சென்று அவளை காப்பாற்றி, அவள் கேட்கும் வரங்களை கொடுங்கள் என்றார்.

இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற அதற்கு சம்மதித்தனர். நாரதரும் அவள் அருகே சென்று அவளை தள்ளிவிடுகிறார். அவள் மலையிலிருந்து கீழே விழும்போது சொன்னாள் 'எந்த லூசு பயடா என்னை தள்ளிவிட்டது".. அட்டென்ட் டைம்ல யுடட கடவுளும் எஸ்கேப்.😂😂

இதனால சொல்ல வரது என்னன்னா... பெண்களோட மனசுல உள்ளத ஆண்டவனாலும் கூட தெரிஞ்சுக்க முடியாது.🤷🤷

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்