இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நந்தன் என்பவர் ஒரு பக்கம் உப்பு
மூட்டைகளையும், மறுபக்கம் சர்க்கரை மூட்டைகளையும் அடுக்கி வைத்திருந்தார். ஆனால்
அந்த மூட்டைகள் எல்லாம் ஈரக்கசிவோடு இருந்தன. அதனால் அவர் அந்த மூட்டைகளை எப்படி
விற்பதென்று தெரியாமல் கவலையோடு இருந்தார். இதைப்பார்த்த அவரின் நண்பர் ராமலிங்கம்
நந்தனிடம், ஏன் கவலையாயிருக்கே என்ன பிரச்சனை என வினவினார்.
நந்தன் விஷயத்தைக் கூறியதும்
இதுக்காகவா கவலைப்படறே. ரேஷன் கடைகள் எதுக்கு இருக்கு அங்க தள்ளிவிட்டு போய்
வேலையைப் பாரு என்றார் ராமலிங்கம். இவர்கள் பேச்சைக் கேட்டதும் சர்க்கரையும்,
உப்பும் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார்களே? அப்படியா நாம் மக்களுக்கு பயணற்று
போவோம்!. என்று வருந்தி தங்களை உற்பத்தி செய்யும் கரும்பிடமும், கடலிடத்திலும்
சென்று முறையிட்டன.
அதற்கு கரும்பு சர்க்கரையைப் பார்த்து
நீ என்ன உப்பா கரிச்சுக் கொட்ட, கல்யாணம் மற்றும் எல்லா வைபவங்களுக்கும் நீ இல்லாமல்
எதுவும் இல்லை, குழந்தைகள் பிறந்தாலும் உன்னைத்தான் கொடுப்பார்கள். தெய்வப்
பிரசாதமாகிய சர்க்கரைப் பொங்கலிலும், உன் அண்ணன் வெல்லம்தான். ஒரு நல்ல செய்தி
சொன்னால் அவன் வாயில் சர்க்கரைப் போடுங்கள் என்பது சொல் வழக்கம். யானைக்கு
பிடித்ததும் கரும்புதான், அம்மன் கையில் வைத்திருப்பதும் கரும்புதான்.
கரும்பில்லாத பொங்கல் விழாவா என்று சர்க்கரைக்கு தைரியம் கூறியது.
இதைக்கேட்ட கடல் ஆத்திரத்தில்
பொங்கியது. அட உப்பே! என்ன யோசிக்கிற. நீயும் இல்லாம ஒரு பண்டமும் இல்லை.
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சாம்பாராகட்டும், ரசமாகட்டும்,
பொரியல், மசாலா எதுவானாலும் நீ இல்லாவிட்டால் வாயில் வைப்பார்களா? ஊறுகாய்க்கும்
உப்பு தான். உங்கள் உப்பைத் தின்பவன் உங்களுக்கு துரோகம் நினைப்பானா என்று தானே
சொல்கிறார்கள்.
உப்பு சப்பில்லாத என்ன சாப்பாடு என்று
சொல்லும் நம்ம ஆதரவாளராகிய சாப்பாட்டு ராமன்கள் இல்லையா? நீ பல பிராண்டுகளில்
விற்பனைக்கு வந்துவிட்டாய். நோய் குணமாக கடவுளிடம் வேண்டிக்கொண்டு உப்பு
போடுகிறார்களே தெரியாதா உனக்கென்ன குறைச்சல் என்றது கடல்.
இதைக் கேட்டதும் உப்பும், சர்க்கரையும்
சிறிது ஆறுதல் அடைந்தது. பின்பு ஒரு நாள் நந்தன் தள்ளாடிக்கொண்டு வீட்டில்
நுழைவதைப் பார்த்த அவர் மனைவி, ஏங்க! என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்று கேட்டார்.
என் காலில் சிறிதாக ஒரு காயம்
ஏற்பட்டுவிட்டது. அதற்கு மருந்து போட்டும், ஊசி போட்டும் குணமாகவே இல்லை. டாக்டர்
என்னிடம், எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு, இனிப்பு சாப்பிடக்கூடாதாம். அப்போது
தான் காயம் குணமாகுமாம் என்று நந்தன் புலம்பினார்.
அதற்கு அவர் மனைவி, அதனால என்னங்க,
இனிமேல் நீங்க சாப்பிடறுதுல சர்க்கரையை ஒதுக்கிடறேன் என்று சமாதானப்படுத்தினார்.
இதைக்கேட்ட உப்பிற்கு ரொம்ப குஷி. சர்க்கரையைப் பார்த்து சிரித்தது.
அந்த சமயம் ராமலிங்கம் அங்கு வந்தார்.
அவரிடம் எல்லாவற்றையும் விளக்கமாக நந்தன் கூறினார். அதைக்கேட்ட ராமலிங்கம் கண்ணீர்
விட்டார். உன்கதை இப்படி. என் கதை தெரியுமா?. நான் திடீரென்று மயங்கி விழுந்து
விட்டேன். அதனால் டாக்டரிடம் பரிசோதித்து பார்த்தேன். அவர் எனக்கு ரத்தக் கொதிப்பு
இருக்கிறது, கொழுப்புச்சத்து அதிகரித்து விட்டது. உடனே சாப்பாட்டில் உப்பைக்
குறைக்க வேண்டும் அல்லது அறவே தவிர்க்க வேண்டும் என்று வருந்தினார்.
இதை செவியுற்ற சர்க்கரை, உப்பை
ஏளனமாகப் பார்த்தது. சர்க்கரை உப்பைக் கூப்பிட்டு நம்மைப் பற்றி நமக்கே
தலைக்கனமேறி விட்டது. அதனால்தான் நம்மைப் படைத்த கடவுள் நமக்கு குட்டிப்பாடம்
கற்பித்துள்ளார் என்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக