Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 நவம்பர், 2019

எல்லையை பிரிக்கும் காட்டு ஓடை... முதுமலை தேசியப் பூங்கா...!!

 Image result for முதுமலை தேசியப் பூங்கா...!!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

தென்னிந்தியாவில் யானை, புலி, கரடி போன்ற அபூர்வ வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை முதுமலை தேசியப் பூங்காவிற்கு உண்டு.

நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது.

இந்த பகுதியில் 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்த அனைவரையும் ஈர்க்கும் பிரபலமான இடம் ஆகும். இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

சிறப்புகள் :

ஊட்டியைப்போல குளிரோ அல்லது சென்னையைப் போல வெயிலோ இருக்காத மசினகுடி ஊர்...

வனத்துறையின் உதவியுடன் திகில் நிறைந்த காட்டுவழி பயணம்...

காட்டு யானைகள் நீர் அருந்த குடும்பம் குடும்பமாக வருவதைக் காணும் வாய்ப்பு...

தமிழக - கர்நாடக எல்லையைப் பிரிக்கும் காட்டு ஓடை...

வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இனங்களை இங்கு பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.
கழுதைப்புலி, நரி, மான் மற்றும் சிறுத்தைப்புலி ஆகிய விலங்குகள் இந்த பசுமை நிறைந்த அமைதியான சூழலில் சமாதானத்தோடு வாழ்ந்து வருகின்றன. அதிகமான புலிகள் வாழ்கின்ற புலிகள் பாதுகாப்பு மையமும் முதுமலை சரணாலயத்தில் இருக்கின்றது. மேலும், எழுநூறுக்கும் மேற்பட்ட யானைகள் இந்த சரணாலயத்தை ஆளுகின்றன.
அதிக எண்ணிக்கையிலான அரிய வகை தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியன முதுமலையை தங்கள் இல்லமாக கொண்டு இருக்கின்றன. எனவே நாட்டில் வேறுபட்ட உயிரினங்களை பாதுகாப்பதில் முதுமலை முக்கிய பங்கு வகிக்கின்றது.

காட்டு நெல், மஞ்சள், காட்டு இஞ்சி, இலவங்கபட்டை, மாங்காய், கொய்யா, மிளகு ஆகியவை இந்த சரணாலயத்தில் வளர்கின்றன.

எப்படி செல்வது?

ஊட்டி, கோவை, சத்தியமங்கலம், பெங்கள%2Bர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

எங்கு தங்குவது?

தெப்பக்காடு ரிசப்ஷன் அருகே வனத்துறை விடுதிகள் இருக்கின்றன. முன்பதிவு செய்வது அவசியம்.

மசினகுடி ஊருக்குள்ளே ஏராளமான தங்கும் விடுதிகளும், ரிசார்ட்டுகளும் இருக்கின்றன.

இதர சுற்றுலாத் தலங்கள் :

பைக்காரா ஏரி...

காலாட்டி அருவி...

மொய்யாறு நதி...

கபினி அணை...

தெப்பக்காடு யானை முகாம்...

பந்திப்பூர் வனவிலங்குகள் சரணாலயம்...

வயநாடு வனவிலங்குகள் சரணாலயம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக