----------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------
----------------------------------------------------
ஆசிரியர் : டேய் என்னடா... கையில ஃபார்முலா எழுதியிருக்க?
மாணவன் : எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில இருக்கணும்னு சொன்னாரு.
ஆசிரியர் : 😳😳
----------------------------------------------------
ஆசிரியர் : ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கிட்டுவந்து வெச்சிருக்க?
மாணவன் : நீங்கதானே சார் சொன்னீங்க?
ஆசிரியர் : நான் எப்போ சொன்னேன்?
மாணவன் : உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்குப் பள்ளிக்கு வரும்போது கொண்டுவாங்கன்னு.
ஆசிரியர் : 😫😫
----------------------------------------------------
----------------------------------------------------
ஓரெழுத்துச் சொற்கள்...!!
----------------------------------------------------
----------------------------------------------------
ஆ ---, பசு
ஈ ---, பறக்கும் பூச்சி
ஓ ---, வினா
கா ---, சோலை
கை ---, கரம்
கோ ---, அரசன், இறைவன்
சா ---, இறப்பு.
----------------------------------------------------
இது எப்படி இருக்கு?
----------------------------------------------------
----------------------------------------------------
👉 உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
👉 பிரச்சனைகள் வரும்போது அல்ல...
👉 பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது.
----------------------------------------------------
இப்படி செய்யாதீர்கள்...!!
----------------------------------------------------
----------------------------------------------------
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்,
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!😀😀
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக