Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஜூலை, 2020

இந்தியாவில் முதலீடு செய்ய அரசின் சிறந்த முதலீட்டு திட்டங்கள்..!

நீங்கள் முதலீடு செய்ய நினைப்பவரா? அதுவும் நிலையான வருவாயினையும் பாதுகாப்பாகவும் இருக்க எண்ணுகிறீர்களா? அதுவும் இந்திய அரசின் முதலீடுகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்கானது தான்.

மக்களின் நிதி பாதுக்காப்பினை வலுப்படுத்த உதவும் பல்வேறு வகையான திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. கீழ் கொடுத்துள்ள இந்த முதலீட்டு திட்டங்கள் அனைத்தும் நீண்டகால பலன்களை கொடுக்க கூடியவை.

மேலும் கவர்ச்சிகரமான லாபம், வரி சலுகை என பல வகையிலும் முதலீட்டாளர்களை கவர்கின்றன. இப்படி பாதுக்காப்பான ஆபத்தில்லாத முதலீட்டு திட்டங்களை தேடும் முதலீட்டாளார்கள், கருத்தில் கொள்ள வேண்டிய சில திட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.


தேசிய ஓய்வூதிய திட்டம்

அரசின் மூலம் கடந்த 2004ம் ஆண்டு முதன் முதலாக அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது இந்த திட்டம். ஆனால் அதன் பின்னர் 2009ல் அனைத்து மக்களுக்கும் முதலீடு செய்யலாம் என விரிபடுத்தப்பட்டுள்ளது. இந்த தேசிய ஓய்வூதிய திட்டமானது குறிப்பாக 18 - 60 வயதுடையோர் முதலீடு செய்ய சிறந்த திட்டமாக இருந்து வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் ஈக்விட்டி மற்றும் கார்ப்பரேட் பாண்ட்கள், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

இந்த முதலீட்டு திட்டத்தில் 50,000 ரூபாய் வரையிலான முதலீட்டு திட்டத்தில் 80 சிசிடின் (1பி) கீழ் வரி விலக்கு உண்டு.


அடல் ஓய்வூதிய திட்டம் பற்றிய விவரங்கள் (APY)

இந்த அடல் ஓய்வூதிய திட்டமானது பொருளாதார ரீதியாக மிக பின்தங்கிய மக்களின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.

18-40 வயதுடைய ஒரு இந்திய குடிமகன் இந்த அடல் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியானவர் தான். இந்த திட்டத்தினை சுய தொழில் செய்பவர்கள் எவரும் எடுக்கலாம்.

நீங்கள் இந்த திட்டத்தில் இணைய உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தில் இந்த திட்டதினை எடுத்துக் கொள்ளலாம். எனினும் இந்த திட்டத்தில் 60 வயது வரை பங்களிப்பு செய்யப்பட வேண்டும்.


கிசான் விகாஸ் பத்திரம்

இந்திய அரசின் உத்தரவதம் கொண்ட சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது விவசாயிகளுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டாலும், தற்போது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஊக்குவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் காலம் 112 மாதங்கள் ஆகும். இதன் மூலம் ஒருவர் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கான அதிகபட்ச வரம்பாக இல்லை.

எனினும் இந்த திட்டத்திற்கு வரிவிலக்கு எதுவும் கிடையாது. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இதனை பயன்படுத்தி வங்கிகளில் கடன் வாங்கிக் கொள்ள முடியும்.


பொது வருங்கால வைப்பு நிதி

இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்களில் சிறந்த ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி. ஏனெனில் இந்த திட்டமானது கவர்ச்சிகரமான வட்டிவிகிதம் மற்றும் லாபம் கிடைக்கிறது.

இதற்கு வரிவிலக்கும் உண்டு. இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் வருமான வரி பிரிவு சட்டபிரிவு, 80சியின் கீழ், முதலீட்டாளர்கள் 1.50 லட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கினை பெற முடியும். இந்த முதலீட்டு திட்டத்தில் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் என இரு வகையான முதிர்வு திட்டங்கள் உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக