கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா, சீனா இடையே நட்பு ரீதியான ஒப்பந்தங்கள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியைச் சீனாவிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் பக்கம் தனது அடுத்த இலக்கை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தற்பொழுது நடந்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி நிறுவனத்தைத் துவங்கவுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் கூடுதலாக 100 கோடி டாலர் முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது. 100 கோடி டாலர் முதலீடு செய்து இந்தியாவில் உற்பத்தியை விரிவுபடுத்த ஆப்பிள் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியை இந்தியாவிலிருந்து தொடர நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் சென்னைக்கு அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 100 கோடி டாலர் முதலீடு செய்யப்படவுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள உற்பத்தி நிறுவனத்தில் ஆப்பிள் எக்ஸ்.ஆர் ஐபோன்கள் தயாரிக்கப்படும் என்ற கூடுதல் தகவலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வரவிற்கும் அடுத்த மூன்று வருடங்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் திட்டத்தின்படி உற்பத்தி நிறுவனம் விரிவுபடுத்தப்படும். இங்கு ஐபோனின் எக்ஸ்ஆர் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய உயர்தர ஐபோன்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கூடுதலாக 6,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக